காலாவதியான அரசு பஸ்களில் இருந்து வெளியேறும் கரும்புகையால், மதுரையில் சுற்றுச்சூழல் மாசு அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், கும்பகோணம், மதுரை, நெல்லை, சேலம், கோவை அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மூலம் சுமார் 22,399 பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் புதிய பஸ்களும் வாங்கப்படுகின்றன.
பொதுவாக போக்குவரத்துக் கழகங்களில் ஒரு பஸ்ஸை 7 ஆண்டுகள் வரை அல்லது 6 லட்சம் கி.மீ. தூரம் வரை இயக்கலாம். அதன் பிறகு அந்த பஸ் காலாவதியான பஸ்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு ஓரங்கட்டப்படும். ஆனால், போக்குவரத்துக் கழகத்தில் காலாவதியான அரசு பஸ்களை ஓரங்கட்டாமல் தொ டர்ந்து இயக்குகின்றனர். சில மண்டலங்களில் 9 ஆண்டுகள் பழைய பஸ்களையும் இயக்கு கின்றனர்.
இந்தியாவில் காலாவதியான பஸ்களை இயக்குவதில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கூரை, படிக்கட்டு இல்லாத பஸ்கள் அதிக எண்ணிக்கையில் இயக்க ப்படுவதில் கன்னியாகுமரி மாவ ட்டம் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தை மதுரை பிடித்துள்ளது. மதுரை மண்டலத்தில் 1,163 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இதில் 730 பஸ்கள் 6 ஆண்டுகள் பழமையான காலாவதியான பஸ்களாகும்.
காலாவதியான பஸ்களில் இருக்கைகள் இருப்பதில்லை. நின்று கொண்டு பயணிக்கும் பயணிகள் விழாமல் பிடிக்க கம்பிகள் இருப்பதில்லை. பிரேக் பிடிப்பதில்லை. பல பஸ்களில் கதவுகள், படிக்கட்டுகள் சரியாக இல்லை. கரும்புகையை அதி களவில் வெளியேற்றி நகரின் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன. இதுதவிர, அடிக்கடி பிரேக் டவுனாகி நடுவழியிலேயே பயணிகள் இறக்கி விடப்படுகின்றனர்.
மதுரை மண்டலத்தில் உள்ள காலாவதியான பஸ்களை ஒட்டுமெ ாத்தமாக நீக்கிவிட்டு, புதிய பஸ்களை இயக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக வி. பிச்சையா தலைமையில் நடைபெற்ற அக்கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட செயற்குழுவில், அரசு போக்குவரத்துக் கழகத்தில் பஸ் பராமரிப்பு பிரிவில் போதிய பணியாளர்கள் இல்லை. போதுமான உதிரி பாகங்கள் இல்லை. அரசு பஸ்களின் மேற்கூரைகள் மழை பெய்தால் ஒழுகுகின்றன. பக்கவாட்டு ஜன்னல்களில் கதவுகள் இல்லை. இதனால் பயணிகள் மழைக் காலங்களில் நனைந்தபடியே பயணிக்கின்றனர்.
கடந்த 3 ஆண்டுகளாக மதுரை மண்டலத்துக்கு புதிய பஸ்கள் வழங்கப்படவில்லை. இந்தக் குறைபாடுகளை களைய வேண்டும் எனத் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.
நிழற்குடை அமைக்கப்படுமா?
பெரியார் பஸ் நிலையம் எதிரே உள்ள காம்ப்ளக்ஸ் பஸ் நிலையத்தில் தினமும் 900 முறை பஸ்கள் வந்து செல்கின்றன. திருப்பரங்குன்றம், திருமங்கலம், அவனியாபுரம், பெருங்குடி, வரிச்சியூர், களிமங்கலம் உள்ளிட்ட ஊர்களுக்கு இங்கிருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும், ஆயிரக்கணக்கானோர் இந்த பஸ் நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். ஆனால், அவர்கள் மழைக்கும், வெயிலுக்கும் ஒதுங்க நிழற்குடை வசதியில்லை. இதனால் காம்ப்ளக்ஸ் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தி உள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago