கடலுக்குச் செல்லும் மீனவர்களுக் குத் தேவையான அத்தியாவசிய தகவல்களைத் தரும் ‘பான் இந்தியா மீனவ நண்பன் கைப்பேசி செயலி’ சேவையை இம்மாத இறுதிக்குள் அறிமுகப்படுத்துகிறது எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்.
மீனவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய தகவல்களை உடனுக்குடன் வழங்கும் ‘மீனவ நண்பன் கைப்பேசி’ சேவையை 2007-ல் இருந்து வழங்கி வருகிறது
இதன்படி, கடலில் அலைகளின் உயரம், புயல் உள்ளிட்ட இயற்கை சீற்ற அறிகுறிகள், ஆபத்து காலங் களில் தொடர்புகொள்ளும் வசதி, ஆபத்தான பகுதிகளை அறிவுறுத் துதல், மீன் வளம் உள்ள பகுதி களை அறிதல், குறிப்பிட்ட வகை மீன்கள் கிடைக்கும் இடங்களை அறிதல், சர்வதேச கடல் எல் லையை உணர்த்துதல் உள்ளிட்ட 13 அத்தியாவசிய சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து பேசிய எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் மீனவ நண்பன் கைப்பேசி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.வேல் விழி, “2013-ல் ‘ஆன்ட்ராய்டு’ வழி செயலி சேவையை தமிழகம், புதுச்சேரி, ஆந்திர மாநிலங்களில் சோதனை முயற்சியாக தொடங்கிய போது நூறு மீனவர்களுக்கு இல வசமாக ‘ஆன்ட்ராய்டு’ கைப்பேசி களை வழங்கி இந்த சேவையைப் பயன்படுத்த வைத்தோம். சேவையை பயன்படுத்திய மீனவர் கள் தந்த பின்னூட்டங்களின் அடிப் படையில் தேவையான திருத்தங் களை மேற்கொண்டு கடந்த டிசம் பரில் இருந்து இம்மூன்று மாநிலங் களிலும் முழுவீச்சில் இச்சேவை செயல்பாட்டுக்கு வந்தது.
அடுத்ததாக ஒடிசா, கேரள மாநிலங்களில் இந்த சேவை இப்போது சோதனை முயற்சியில் உள்ளது. இந்த சேவையை 20 ஆயிரம் மீனவர்கள் இப்போது முழுமையாகப் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
அடுத்தகட்டமாக, மேற்குவங் கம், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா மாநில அரசுகள் தங்களது மீனவர்களுக்கும் இச்சேவையை அளிக்கும்படி கேட்டிருக்கின்றன. எனவே ஒட்டுமொத்தமாக 9 மாநிலங்களுக்கும் பொதுவான ‘பான் இந்தியா மீனவ நண்பன் கேப்பேசி செயலி’ (Pan India Fisher Friend Mobile Application) ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறோம்.
இந்த செயலியை பயன்படுத் தும் மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையை நெருங்கும்போது 5 கிலோமீட்டருக்கு முன்னதாக எச்சரிக்கை மணி அடிக்கும். அதை கவனிக்காமல் சென்றால் 2 நிமிடங்களுக்கு ஒருமுறை எச்சரிக்கை ஒலி எழும்பும். எல்லை தாண்டும் தமிழக மீனவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கிறது. இப்போதைக்கு எங்களது ‘ஹெல்ப் லைன்’ எண்ணுக்கு (9381442312) தொடர்புகொண்டு நடப்பில் உள்ள செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ‘பான் இந் தியா’ செயலியை ‘கூகுள் ப்ளே ஸ்டோரில்’ பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியையும் கொண்டு வர இருக்கிறோம்’’ என்றார்.
செயற்கைக்கோள் மூலம் இடமறிதல் சேவை
இஸ்ரோ மூத்த விஞ்ஞானி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘இதுநாள் வரை அமெரிக்காவின் ஜிபிஎஸ் (GPS-Global positioning service) சேவையைதான் நாம் இடமறிதல் தொழில்நுட்பத்துக்கு பயன்படுத்தி வந்தோம். இந்நிலையில், இந்தியா சொந்தமாக அந்த சேவையை பயன்படுத்துகிற வகையில் ஐஆர்என்எஸ்எஸ் (IRNSS Independent regional navigation service system) என்னும் பெயரில் 1ஏ, 1பி, 1சி, 1டி, 1 எஃப் மற்றும் 1ஜி ஆகிய செயற்கைக்கோள்கள் கடந்த ஜுன் 2013 முதல் ஏப்ரல் 2016 வரை பல்வேறு காலகட்டங்களில் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.
நிலையான இடமறிதல் சேவை (Standard positioning service), குறிப்பிட்ட துறையினருக்கான இடமறிதல் சேவை (Restricted positioning service) என 2 பிரிவுகளின்படி அந்த செயற்கைக்கோள்களால் இடமறிதல் சேவையை வழங்க முடியும். நிலையான இடமறிதல் சேவையை பொதுமக்கள் பயன்படுத்தலாம். குறிப்பிட்ட துறையினருக்கான இடமறிதல் சேவையை ராணுவம், உளவுத்துறை, காவல்துறை, கடலோர பாதுகாப்புத் துறை போன்ற துறையினர் மட்டுமே பயன்படுத்த முடியும். இதில், மீனவர்களுக்கு நிலையான இடமறிதல் சேவையை வழங்க முடியும். நாங்கள் வெறும் சேவை வழங்குநர்கள்தான். அரசுதான் இதற்கு கொள்கை சார்ந்த முடிவுகளை எடுக்க வேண்டும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
28 mins ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago