ஆண்டிப்பட்டி எம்எல்ஏவால் ஓரங்கட்டப்படும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்: அதிமுக விசுவாசிகள் குமுறல்

By ஆர்.செளந்தர்

தேனி மாவட்ட அதிமுக செயலாளரும், ஆண்டிபட்டி எம்எல்ஏவுமான தங்கதமிழ்செல்வன், நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களை ஓரங்கட்டுவதாக அதிமுக விசுவாசிகள் குமுறுகின்றனர்.

நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல் வம் கடந்த 2001 செப். 21-ம் தேதி முதல் 2002 மார்ச் 1-ம் தேதி வரை தமிழக முதலமைச்சராக பொறுப்பு வகித்தார். பின்னர் 2014 செப். 29-ம் தேதி முதல் கடந்த ஆண்டு மே 22-ம் தேதி வரை 2-வது முறையாக முதலமைச்சராக இருந்துள்ளார்.

தற்போது முதலமைச்சர் ஜெய லலிதா மருத்துவமனையில் இருப்ப தால் அவருடைய இலாகாக் கள் இவரிடம் ஒப்படைக்கப்பட் டுள்ளன. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத் தின் ஆதரவாளர்கள், மாவட்டச் செயலாளர் தங்கதமிழ்செல்வனால் ஓரங்கட்டப்பட்டு வருவதாக அதிமுக விசுவாசிகள் மத்தியில் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் கட்சி விசுவாசிகள் சிலர் கூறிய தாவது: ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான டி.டி.சிவக் குமார் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, தங்கதமிழ்செல்வன் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் வகித்துவந்த மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலா ளர் பதவி பறிக்கப்பட்டு தங்க தமிழ்செல்வன் ஆதரவாளரான ஸ்டார் ரபீக் என்பவருக்கு கொடுக் கப்பட்டது.

மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளரான எல்லைப் பட்டி முருகனின் பதவி பறிக்கப் பட்டு தங்கதமிழ்செல்வன் ஆதர வாளருக்கு கொடுக்கப்பட்டது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வத்தை தோற்கடிக்க சிலர் மறைமுகமான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றதால் அவரை ஓரங் கட்டுவதற்காக அவரிடம் கலந்து ஆலோசனை செய்யாமல் உள் ளாட்சித் தேர்தல் வேட்பாளர் பட்டி யலை மேலிடத்துக்கு அனுப்பி ஒப்புதல் பெறப்பட்டது. சீட் பெற புதிய முகங்களில் பலர் பணம் கொடுத்துள்ளதாகக் கூறப்படு கிறது.

பதவியிலிருந்து நீக்கம்

தங்கதமிழ்செல்வன் மாவட்ட செயலாளர் ஆனது முதல், ஓ.பன் னீர்செல்வத்தின் தீவிர ஆதரவு நிர்வாகிகள் தங்கதமிழ்செல்வனின் ஆதரவாளர்களாக மாறி விட்டனர். தனக்கு ஆதரவு அளிக்காதவர் களை கட்சி பதவியில் இருந்து தங்கதமிழ்செல்வன் நீக்கி வருகி றார். தற்போது ஓ.பன்னீர்செல் வத்தின் ஆதரவாளர்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப் பட்டுள்ளனர்.

இதற்கிடையில் இன்று (14-ம் தேதி) வீரபாண்டி மாரியம் மன்கோயிலில் தமிழக முதல்வர் பூரண குணம் அடைய வேண்டி 25 ஆயிரம் பேர் பால்குடம், காவடி, தீச்சட்டி எடுத்தல் மற்றும் யாக பூஜை நடத்த வேட்பாளர்கள், கட்சி நிர்வாகிகளிடம் இருந்து தலா ரூ.4 ஆயிரம் வரை பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது. தங்கதமிழ்செல்வன் தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டு கட்சியிலும், மக்கள் மத்தியிலும் தனக்கு செல்வாக்கு இருப்பது போல வெளிக்காட்டி வருகிறார். இந்த செயல் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தவிர தங்கதமிழ்செல்வன் பிறந்த நாள் விழாவை கொண்டாடும் விதமாக கடந்த 3-ம் தேதி அவரது ஆதரவாளர் ஒருவர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து கம்பம் பகுதியில் பிளக்ஸ் போர்டு வைத்திருந்தார். கட்சி தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்த பின்னர் பிளக்ஸ்போர்டு அகற்றப்பட்டது. ஆனால் இது வரை பிளக்ஸ்போர்டு வைத்த கட்சி நிர்வாகி மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர்.

இதுகுறித்து தங்கதமிழ் செல்வனிடம் கேட்டபோது, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட சாதாரண தொண்டருக்குகூட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சீட் கொடுக்க வேட்பாளர்களிடம் பணம் எதுவும் வாங்கவில்லை, எனது சொந்த பணத்தை செலவிட்டு வீரபாண்டி கோயிலில் முதல்வர் உடல் நலம் குணம் அடைய வேண்டுதல் நடத்துகிறேன். நான் மாவட்டச் செயலாளராக இருந்தபோது நான் நியமித்த ஒன்றிய, நகர, நிர்வாகிகள் நான் பதவியை இழந்தவுடன் என்னிடம் பேச அச்சம் அடைந்தனர். ஆனால் அதையெல்லாமல் மறந்து விட்டேன்.

மீண்டும் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்ட பின்னர் தற்போது வரை அவர்களை நான் மாற்றிவிட்டு வேறு புதிய நபர்களை நியமிக்கவில்லை, அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தங்கதமிழ்செல்வன் என்று யாருக் கும் ஆதரவாளர்கள் இல்லை, அதிமுகவினர் அனைவரும் அம்மாவின் ஆதரவாளர்கள்தான். என் மீது சிலர் வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி தவறான தகவல்களை பரப்புகின்றனர் என்றார்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

தமிழகம்

21 hours ago

மேலும்