கடலூர் அருகே தாழங்குடா கடற்கரையில் ஒதுங்கிய மரபொம்மையை கடலோர காவல்படையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் அருகே தாழங்குடா கடற்கரையில் நேற்று அதிகாலை மரத்தால் ஆன பழங்காலத்து பொம்மை ஒன்று கரை ஒதுங்கியது. இதைப்பார்த்த அப்பகுதி மீனவர்கள் இதுகுறித்து கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் சங்கீதா, சப்-இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பொம்மையை கைப்பற்றினர்.
அது சுமார் ஒன்றரை அடி உயரமுள்ள பழங்காலத்து மரப்பாச்சி பொம்மை என தெரியவந்தது. மேலும் புதுச்சேரி மாநிலம் பொம்மையார்பாளையம் என்ற பகுதியில் மர பொம்மைகள் செய்யும் பணி நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. அந்தப் பகுதியில் இருந்து கரை ஓதுங்கியதா? பழங்காலத்தில் செய்யப்பட்ட பொம்மையா? என்பது குறித்து கடலோர காவல்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
30 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago