பொங்கல் பரிசுடன் சிரிப்பால் பிரபலமான குமரி மூதாட்டிக்கு அரசின் இலவச வீடு: தேடி வந்த ஆணை

By செய்திப்பிரிவு

பொங்கல் பரிசு பொருட்களுடன் பொக்கைவாய் சிரிப்பால் சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமாகி முதல்வரின் கவனத்தை ஈர்த்த நாகர்கோவிலை சேர்ந்த மூதாட்டி வேலம்மாளுக்கு தமிழக அரசால் இலவச வீடு ஒதுக்கப்பட்டது. இதற்கான ஆணையை அவரது வீட்டுக்கே சென்று கோட்டாட்சியர் வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கீழக்கலுங்கடியை சேர்ந்தவர் வேலம்மாள் (90). குடிசை வீட்டில் வாழும் இவர், கடந்த பொங்கலின்போது ரேஷன் கடையில் தனக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகையை கையில் வைத்தவாறு பொக்கைவாய் சிரிப்புடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது.

மூதாட்டி வேலம்மாளின் மகிழ்ச்சி கலந்த புகைப்படத்தை பார்த்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ``தாய்மார்களின் சிரிப்பே, தங்களது அரசின் சிறப்பு`` என கருத்து தெரிவித்திருந்தார். அரசு விளம்பரங்களிலும் அந்தப் படம் பயன்படுத்தப்பட்டது.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் நாகர்கோவில் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மூதாட்டி வேலம்மாளை சந்தித்து பேசினார். அப்போது வாழ்வாதாரம் இல்லாத தனக்கு முதியோர் ஓய்வூதியமும், இலவச வீடும் வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். இவற்றை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.

முதியோர் ஓய்வூதியம் உடனடியாக வழங்கப்பட்ட நிலையில், இலவச வீடு வழங்கப்படாமல் இருந்தது. இதுதொடர்பாக முதல்வரின் வாக்குறுதியை சுட்டிக்காட்டி வீடு வழங்கும் கோரிக்கை நிலுவையில் இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

முதல்வர் பார்வைக்கு இச்செய்தி சென்றதை தொடர்ந்து உடனடியாக இலவச வீடு வழங்க அவர் உத்தரவிட்டார். குமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் அறிவுறுத்தலின்பேரில் மூதாட்டி வேலம்மாளுக்கு நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் அஞ்சுகிராமம் பால்குளத்தில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கினார்.

ஆனால், இதன் பொருட்டு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு வழங்கவேண்டிய ரூ.76 ஆயிரம் வேலம்மாளிடம் இல்லை. அவருக்காக இத்தொகையை தோவாளை ஒன்றியத்தை சேர்ந்த திமுக பிமுகர் பூதலிங்கம் செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவோடு இரவோக கீழக்கலுங்கடியில் உள்ள வேலம்மாள் வீட்டுக்கு கோட்டாட் சியர் சேதுராமலிங்கம் நேரில் சென்று இலவச வீட்டுக்கான ஆணையை அவரிடம் வழங்கினார்.

வேலம்மாள் பாட்டியை நாகர்கோவில் மேயர் மகேஷ் மற்றும் பிரமுகர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்