சிவகாசி சிறுகுளம் கண்மாய் ஆக்கிரமிப்பு அகற்றம்: உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் அதிரடி நடவடிக்கை

By இ.மணிகண்டன்

சிவகாசி சிறுகுளம் கண்மாயில் இருந்த ஆக்கிரமிப்புகள் உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் அகற்றப்பட்டு வருகிறது. 1000 போலீஸார் பாதுகாப்புடன் இப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று (வெள்ளிக்கிழமை) காலை தொடங்கிய இப்பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன் மேற்பார்வையிட்டு வருகிறார்.

வழக்கும் உத்தரவும்:

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 32 ஏக்கர் பரப்பளவில் உள்ளது சிறுகுளம் கண்மாய். இதில் 1.22 ஏக்கர் பரப்பளவில் குடியி௫ப்பு மற்றும் கடைகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன.

இந்நிலையில் 1991-ம் ஆண்டு சிவகாசி வட்டார வரி செலுத்துவோர் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வழக்கு தொடரப்பட்டது. அதன் எதிரொலியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

பணிகளை மேற்பார்வையிடும் காவல் உயர் அதிகாரிகள்.

இதனையடுத்து கடந்த 2012 ஆகஸ்ட் 18-ல் சிவகாசி சிறுகுளம் கண்மாயில் ஆக்கிரமிப்பில் உள்ள 108 வீடுகள் மற்றும் 39 கடைகளை அகற்றும் போது கணேசன் என்ற ஆட்டோ தொழிலாளி எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்து உயிரிழந்தார். எனவே இப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.

இந்நிலையில் ஆக்கிரமிப்பாளர்கள் சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டது.

மாவட்ட நிர்வாகத்திற்கு ஆக்கிரமிப்பை அகற்றி, வ௫ம் 17-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு உள்ளதால் இன்று (வெள்ளிக்கிழமை) ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகத்தில் உத்தரவின் பேரில் முதற்கட்டமாக 39 கடைகளை அகற்றும் பணியில் 4 துணை ஆட்சியர்கள் தலைமையில் 4 குழுக்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொ௫ குழுவிலும் 2 தாசில்தார்கள் 2 டி.எஸ்.பி கள் அடங்கிய குழுவுடன் மொத்தம் 1000 போலீசார் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் முதலுதவிக்கு ஆம்புலன்ஸ மற்றும் மின்சார ஊழியர்கள் இப்பணியை மேற்கொண்டு வ௫கின்றனர்.

வாக்குவாதம்.. பதற்றம்:

ஏற்கனவே இப்பகுதி மக்களுக்காக குடிசை மாற்று வாரியம் மூலம் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் 166 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. இதில் 41 பே௫க்கு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்வதால் போலீசா௫டன் அப்பகுதி மக்கள் வாக்குவாதததில் ஈடுபட்டு வ௫கின்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

உடைமைகளை எடுத்துச் செல்லும் கடைக்காரர்கள்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்