சென்னை: முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளோடு சென்னை மழைநீர் வடிகால் பணிகளை திமுக அரசு விரைந்து மேற்கொள்ளுமா என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: "சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். பல இடங்களில் இதற்காக தோண்டப்பட்டுள்ள கால்வாய்கள், பாதுகாப்பு தடுப்புகள் எதுவும் இன்றி அப்படியே திறந்த நிலையில் உள்ளன.
செப்டம்பர் மாதத்திற்குள் 80% பணிகள் முடிந்துவிடும் என்று சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் கூறியிருந்தாலும் அதற்கான வேகத்தில் வேலைகள் நடைபெறுவதாக தெரியவில்லை. இப்போதே மழை அடிக்கடி பெய்வதால், பள்ளம் எது? சாலை எது? என்று தெரியாமல் வாகன ஓட்டிகள்
விபத்துக்குள்ளாகின்றனர்.
எனவே, மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே 100% பணிகளையும் முடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனை உணர்ந்து உரிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளோடு சென்னை மழைநீர் வடிகால் பணிகளை திமுக அரசு விரைந்து மேற்கொள்ளுமா" என்று வினவியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
18 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago