சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விபத்து: 6 பேர் பலி; ஐவர் படுகாயம்

By எஸ்.சீனிவாசன்

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் துலுக்கனுர் கிராமம் அருகே இன்று அதிகாலையில் நடந்த விபத்தில் 6 பேர் பலியாகினர். 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாமக்கல் மாவட்ட குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (29). இவர் சேலம் ஆத்தூர் லீ பஜார் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் நடந்த இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்தார். இவருடன் வேனில் உறவினர்கள் 10 பேர் வந்திருந்தனர். துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு நேற்றிரவு நாமக்கல் திரும்பிய போது சுமார் 12.30 மணியளவில் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தேநீர் கடையில் தேநீர் அருந்துவதற்காக ராஜேஷ் என்பவர் வாகனத்தை திருப்பினார்.

அப்போது, பைபாஸ் சாலை தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மேற்புறம் உள்ள மேம்பாலத்தில் ராஜேஷ் மற்றும் அவரது உறவினர்கள் சென்ற ஆம்னி வேனும் எதிர்புறம் இருந்து வந்த ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதின.

இதில் ஆம்னி வேனில் இருந்தவர்கள் 6 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு, மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் விபத்து நடைபெற்ற இடத்திற்கு இன்று காலை 8 மணியளவில் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

உயிரிழந்தவர்கள் விவரம்:

1) சரண்யா க .பெ. சுதாகர்(வயது 23)

2) சுகன்யா க.பெ சந்தோஷ் குமார்(வயது 27)

3) சந்தியா த.பெ மயில்வாகனன் (வயது 23 )

4) ரம்யா த.பெ ஆனந்தன் (வயது 25)

5) ராஜேஷ் த‌.பெ ஆனந்தன் (வயது 21) ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர்‌.

6) தன்ஷிகா த.பெ. சந்தோஷ் குமார் (வயது 11) என்பவர் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

காயமடைந்தவர்கள் விவரம்:

1) சுதா க.பெ மாரிசாமி (வயது 36)

2) பெரியண்ணன் த.பெ பெரியசாமி (வயது 38 )

3) புவனேஸ்வரி த.பெ ஹரிமூர்த்தி (வயது 17)

4) கிருஷ்ணவேணி க.பெ செல்வராஜ் (வயது 45)

5) உதயகுமார் த.பெ சிவகுமார் (வயது 17) ஆகியோர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்