சென்னை புறநகர் பகுதியில் தீபாவளியையொட்டி ரேஷன் கடைகளில் சர்க்கரை, அரிசி மட்டுமே வழங்கப்படுகிறது. பாமாயில், பருப்பு, உளுந்து உள்ளிட்ட பண்டிகை பொருட்கள் கிடைக்காததால், பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
சென்னை மற்றும் புறநகரில், 18 உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மண்டல அலுவலகங்கள் உள்ளன. இவற்றின் கட்டுப்பாட்டில் ஒரு மண்டலத்தில் சுமார் 900 முதல் 1000 வரை ரேஷன் கடைகள் இருக்கும். ஒவ்வொரு ரேஷன் கடையிலும் 1000 முதல் 1500 கார்டு இருக்கிறது.
ரேஷன் கடைகளில் தீபா வளியையொட்டி பாமாயில், பருப்பு, உளுந்து, கோதுமை மற்றும் சர்க்கரை உள்ளிட்ட பண் டிகைப் பொருட்கள் அனைத்தை யும் தடையின்றி பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது.
ஆனால், இந்த மாதம் வழக்க மாக வழங்கப்படும் பாமாயில், பருப்பு, உளுந்து, கோதுமை கூட இதுவரை ரேஷன் கடைகளில் கிடைக்கவில்லை. குறிப்பாக சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் சர்க்கரை, அரிசி மட்டும் முழுமையாக வழங்கப்பட்டுள்ளன. பருப்பு வகைகள், மற்றும் பாமாயில் குறைவான அளவே வழங்கப் பட்டுள்ளன. பொருட்கள் கிடைக் காததால் பொது மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து ஊழியர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘ரேஷன் கடைகளுக்கு 25 முதல் 30-ம் தேதி வரை 60 சதவீத பொருட்களும் 6-ல் இருந்து 20-ம் தேதிக்குள் 40 சதவீத பொருட்களும் வருகின்றன. இதில் பருப்பு, உளுந்து ஆகிய பொருட்கள் 60 முதல், 70 சதவீத அளவுக்குத்தான் சப்ளை செய்யப்படுகின்றன. பொது மக்களுக்கு போய் சேருவதோ, 40 சதவீதம் மட்டுமே. அதிலும் கோதுமை 50 சதவீதம், மண் ணெண்ணெய், 50 சதவீதம்தான் அரசே ஒதுக்கீடு செய்கிறது.
இதனால் முதலில் வரு வோருக்கு மட்டுமே பொருட்கள் கிடைக்கும் நிலை உள்ளது. ஒரு சில நாட்களில் எந்தப் பொருளும் கிடைக்காமல் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். இதனால் பொதுமக்கள், கடை ஊழியர்களிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது. தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து ஏழை, எளிய மக்களுக்கு, அனைத்து பொருட்களும் ரேஷன் கடையில் கிடைக்கச் செய்ய வேண்டும்’ என்றார்.
உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை உதவி ஆணையர் ஒருவர் கூறும்போது, ‘அரசு அனைத்து அட்டை தரார் களுக்கும் பொருட்கள் ஒதுக்கீடு செய்வதில்லை.
வழங்கப்பட்ட குறைவான பொருட்களை கடை வாரியாகப் பிரித்து வழங்கி வருகி றோம். அரசு முழுமையாக ஒதுக் கீடு செய்தால் அனைவருக்கும் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும்’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago