திண்டுக்கல் மாவட்டத்தில் சந்தன மரங்களை வெட்டிக் கடத்தும் சம்பவங்கள் தொடர்கின்றன. இதைத் தடுப்பதற்கு வனத்துறையினரும், போலீஸாரும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடியில் உள்ள காப்பி ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டன. இதுகுறித்து காப்பி ஆராய்ச்சி நிலைய நிர்வாகிகள் தாண்டிக்குடி போலீஸிலும், வனத்துறையினரிடமும் புகார் கொடுத்தனர். இந்த மரங்களை வெட்டிக் கடத்திய மர்மநபர்களை பிடிக்க முடியாமல் போலீஸாரும், வனத்துறையினரும் திணறி வருகின்றனர்.
இதேபோல், பழநி தேவஸ்தான அலுவலக வளாகத்தில் இருந்த சந்தன மரத்தையும் மர்மநபர் கள் வெட்டிக் கடத்தினர். தேவஸ் தான அலுவலகத்துக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு பணிக்கென காவலாளிகள் உள்ள நிலையிலும், இந்த சம்பவம் நடந்துள்ளது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக் கியது. இந்த வழக்கிலும் இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், பழநி அருகே சட்டப் பாறை பகுதியில் நேற்று முன்தினம் சந்தன மரங்களை வெட்டி 81 கிலோ சந்தனக் கட்டைகளை காரில் கடத்திச்சென்ற ஏற்காட்டை சேர்ந்த தேவேந்திரன் என்பவரை வனத்துறையினர் பிடித்தனர். கடத்தப்பட்ட சந்தனக் கட்டைகளின் மதிப்பு ரூ.4 லட்சம்.
இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ஏற்காட்டை சேர்ந்த அண்ணாதுரை என்ப வரை வனத்துறையினர் தேடிவரு கின்றனர். அதோடு, தாண்டிக் குடியிலும், பழநி தேவஸ்தான அலுவலகத்திலும் சந்தன மரங் களை வெட்டிக் கடத்தியதில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு நிறுவன பாதுகாப்பில் உள்ள இடங்களில் சந்தன மரங் களை வெட்டி வந்த கும்பல், இப்போது காட்டுக்குள் புகுந்து மரங்களை வெட்டத் தொடங்கி யுள்ளது. இது, வனத்துறையின் பாதுகாப்பு ஏற்பாட்டில் உள்ள குறைபாட்டையே வெளிப்படுத்து கிறது.
இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர் கூறுகையில், “இந்த பாதுகாப்பு குறைபாட்டுக்கு வனத்துறை ஊழியர்கள் பற்றாக் குறையை காரணமாக கூறுகின் றனர். போதிய எண்ணிக்கையில் ஊழியர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும். தற்போது பணியில் உள்ள ஊழியர்கள் கூடுதல் விழிப்பு ணர்வோடு வனப்பகுதியை கண் காணிக்க வேண்டும்.
தற்போது பிடிபட்ட நபரை கைது செய்ததோடு கடமையை முடித்துவிடாமல், அவருக்கு பின் னணியில் உள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டும். அப்போது தான் இயற்கை வளத்தை நம்மால் பாதுகாக்க முடியும்” என்றார்.
பாதுகாப்பு குறைபாட்டுக்கு வனத்துறை ஊழியர்கள் பற்றாக்குறையை காரணமாக கூறுகின்றனர். போதிய ஊழியர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago