உலக நாடுகள் இந்தியாவின் வளர்ச்சியை பார்த்து ஆச்சரியப்படுகின்றன என பாஜக முன்னாள் தேசியச் செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.
‘மோடி @20 ட்ரீம்ஸ் மீட் டெலிவரி’ என்ற நூல் குறித்து கட்சியினரிடம் விளக்கும் கூட்டம், காரைக்காலில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
பாஜக புதுச்சேரி மாநிலத் தலைவர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பாஜக முன்னாள் தேசியச் செயலாளர் எச்.ராஜா பேசியது:
இந்த நூலில் உள்ள கருத்துகளை மக்களிடம் கட்சியினர் கொண்டு சேர்க்க வேண்டும். நாட்டில் கம்யூனிஸம் அழிந்து வருகிறது.
» இலவசங்கள் தமிழகத்தை ஏழ்மை நிலைக்கு தள்ளிவிடவில்லை: உச்ச நீதிமன்றத்தில் திமுக வாதம்
» நிதித் துறைக்கு பொருத்தம் இல்லாமல் விமர்சனங்களை வைக்கிறார் பிடிஆர்: வானதி சீனிவாசன்
காங்கிரஸின் சுயநல அரசியலை மக்கள் வெறுக்கின்றனர். பாஜக ஆட்சியில் ஊழல் இல்லை. உலக நாடுகள் பலவும் இந்தியாவின் வளர்ச்சியை பார்த்து ஆச்சரியப்படுகின்றன. கரோனாவால் உலகமே தவித்தபோது, இந்தியாவிலேயே தடுப்பூசி தயாரித்து உள்நாட்டு மக்களுக்கு வழங்கியதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து சாதனைப் படைத்தது பாஜக அரசு என்றார்.
புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணன் குமார், எம்எல்ஏ ராமலிங்கம், மாநிலப் பொதுச் செயலர் மோகன்குமார், மாநிலச் செயலர் சகுந்தலா, மாவட்டத் தலைவர் ஜெ.துரை சேனாதிபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago