ஆக.29-ல் ஆசிரியர் அலகு மாறுதல் கலந்தாய்வு

By செய்திப்பிரிவு

சென்னை: தொடக்கக் கல்வித் துறையில் அலகு விட்டு அலகு மாறுதல் கலந்தாய்வு ஆகஸ்ட் 29-ம் தேதி நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் தொடக்கக் கல்வி இயக்குநர் க.அறிவொளி அனுப்பிய சுற்றறிக்கை: அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல், பதவிஉயர்வு, பணிநிரவல் கலந்தாய்வுசார்பான கொள்கைகள் கடந்த ஆண்டு வகுக்கப்பட்டன. அவற்றை பின்பற்றி 2021-22 கல்வி ஆண்டில் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வுகள் ‘எமிஸ்' வலைதளம் மூலம் நடத்தி முடிக்கப்பட்டன. தொடர்ந்து அலகு விட்டு அலகு மாறுதலுக்கான கலந்தாய்வு நடக்க உள்ளது.

இதற்கு, தடையில்லா சான்று பெற்று பிற துறைகளில் இருந்துதொடக்கக் கல்வி இயக்குநரகத்துக்கு மாறுதல் பெற விரும்பும் ஆசிரியர்கள் தங்கள் விண்ணப்பத்தை ஆகஸ்ட் 24, 25-ல்எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும். அவற்றை மாவட்டக் கல்வி அதிகாரிகள் சரிபார்த்து, இணைய வழியாக ஒப்புதல் தரவேண்டும். பின்னர், தகுதிஉடைய ஆசிரியர்களுக்கு அலகுவிட்டு அலகு மாறுதல் கலந்தாய்வுஆகஸ்ட் 29-ல் நடைபெறும். புகாருக்கு இடமின்றி இப்பணிகளை முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

30 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்