சென்னை: சென்னை தின கொண்டாட்டத்தை முன்னிட்டு பெசன்ட் நகர் - எலியட்ஸ் கடற்கரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் எலியட் கடற்கரையில் மாலை 3.30 மணி முதல் 11.30 மணி வரை சென்னை தின கொண்டாட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறகிறது. இதன் காரணமாக பெசன்ட் நகர் 6-வது நிழற்சாலை முதல் போலீஸ் பூத் முதல் மீன் கடை வரை சுமார் 850 மீட்டர் தூரத்திற்கு 20-ம் தேதி மாலை 6 மணி முதல் 22ம் தேதி மாலை 6 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விவரம்
7வது நிழற்சாலையிலிருந்து 6வது நிழற்சாலை வரை எலியட்ஸ்கடற்கரைக்கு செல்ல வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு, 16வது குறுக்குத் தெரு வழியாக 2வது நிழற்சாலையை நோக்கி திருப்பி விடப்படும்.
16வது குறுக்குத் தெருவில் இருந்து 6வது நிழற்சாலையை நோக்கிச் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு, 2வது நிழற்சாலை மற்றும் 16வது குறுக்குத் தெரு சந்திப்பில் திருப்பி விடப்படும்.
3வது மெயின் ரோட்டில் இருந்து 6வது நிழற்சாலையை நோக்கி செல்லும் வாகனங்கள் தடைசெய்யப்பட்டு, 3வது மெயின் ரோடு மற்றும் 2வது நிழற்சாலை சந்திப்பில் திருப்பி விடப்படும்.
4வது மெயின் ரோடு மற்றும் 5வது நிழற்சாலையில் இருந்து 6வது நிழற்சாலை வழியாக எலியட்ஸ் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 4வது மெயின் ரோடு மற்றும் 5வது நிழற்சாலை வழியாக திருப்பி விடப்படும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago