சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கனடா பயணம் - காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கிறார்

By செய்திப்பிரிவு

சென்னை: காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதற்காக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, பேரவை செயலர் சீனிவாசன் ஆகியோர் கனடா செல்கின்றனர். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கனடாவின் ஹாலிபேக்ஸ் நகரில் 65-வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு ஆக.22 முதல் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், தமிழகத்தின் பிரதிநிதியாக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் நடைபெறும் சொசைட்டி ஆஃப் கிளர்க்ஸ் அட் த டேபிள் (எஸ்ஓசிஏடிடி) கூட்டங்களில் பேரவை செயலர் கி.சீனிவாசன் பங்கேற்கிறார்.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, பேரவைத் தலைவர், செயலர் ஆகியோர் 18-ம் தேதி (நேற்று) இரவு 9.45 மணிக்கு விமானம் மூலம் துபாய் சென்று அங்கிருந்து சான்பிரான்சிஸ்கோ நகருக்கு ஆய்வுப் பயணம் மேற்கொண்டு பிறகு, ஹாலிபேக்ஸ் நகர் சென்றடைகின்றனர். செப்டம்பர் 1-ம் தேதி சென்னை திரும்புகின்றனர்.

இந்நிலையில், பேரவைத் தலைவர் அப்பாவு அறைக்கு சென்றுஅவருக்கு முதல்வர் ஸ்டாலின், வாழ்த்து தெரிவித்தார். அமைச்சர் பொன்முடி உடன் இருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்