எர்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவப் பிரிவில் இயங்கும் மூலிகை நீராவிக் குளியல் சிகிச்சைக்கு மக்கள் ஆர்வமுடன் வருகின்றனர். அதன்படி கடந்த ஓராண்டில் மட்டும் 600-க்கும் அதிகமானோர் மூலிகை நீராவிக் குளியல் சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளனர்.
நாமக்கல் அருகே எர்ணாபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அந்த ஆரம்ப சுகாதார நிலைய கட்டுப்பாட்டில் உள்ள சித்த மருத்துவப் பிரிவுக்கு கடந்த ஓராண்டுக்கு முன் தேசிய ஊரக நலத்திட்ட இயக்கத்தின் கீழ் மூலிகை நீராவிக் குளியல் இயந்திரம் வழங்கப்பட்டது. நாள்தோறும் ஏதாவது ஒரு மூலிகைச் செடி, மூலிகை நீராவிக் குளியலுக்கு பயன்படுத்தப்படுகிறது. தனியார் நிறுவனங்களில் நீராவிக் குளியல் சிகிச்சை முறைக்கு குறைந்தபட்சம் ரூ.1,500 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது.
எனினும், எர்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முற்றிலும் இலவசமாக, தனியார் நிறுவனங்களுக்கு இணையாகவும் மூலிகை நீராவிக் குளியல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதன்காரணமாக நாள்தோறும் ஏராளமான மக்கள் எர்ணாபுரம் சித்த மருத்துவப் பிரிவில் உள்ள நீராவிக் குளியல் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். அதன்படி கடந்த ஓராண்டில் மட்டும் 600-க்கும் மேற்பட்டோர் நீராவிக் குளியல் சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளனர் என, எர்ணாபுரம் சித்த மருத்துவப் பிரிவு மருத்துவர் எஸ்.பூபதி ராஜா தெரிவிக்கிறார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘தேசிய ஊரக நலத்திட்ட இயக்கத்தின் கீழ் இயங்கும் சித்த மருத்துவப் பிரிவுக்கு கடந்த 2015-ம் ஆண்டு மூலிகை நீராவிக் குளியல் சிகிச்சை இயந்திரம், அகச்சிவப்பு சிகிச்சை இயந்திரம், மூலிகை ஆவி பிடித்தல் இயந்திரம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. மூலிகை நீராவிக் குளியல் சிகிச்சை முறையால் உடல் எடை குறைதல், சரும நோய் நீங்குதல் போன்ற பல்வேறு பயன்கள் ஏற்படுகிறது. தனியார் நிறுவனத்திடம் குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது.
இங்கு முற்றிலும் இலவசமாக நீராவிக் குளியல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை பெற வருபவர்களுக்கு தேவையான வசதிகள் சித்த மருத்துவப் பிரிவில் உள்ளன. சிறப்பான சிகிச்சை காரணமாக கடந்த ஓராண்டில் மட்டும் 600-க்கும் மேற்பட்டோர் மூலிகை நீராவிக் குளியல் சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளனர். மக்கள் ஆர்வமுடன் நீராவி குளியல் சிகிச்சைக்கு வருகின்றனர். சிறியவர், பெரியவர் என, அனைத்து தரப்பினரும் நீராவிக் குளியல் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். இந்த சிகிச்சை முறையால் உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
நாமக்கல் மாவட்டத்தில் அத்தனூர், அலங்காநத்தம், பாலப்பட்டி, வெங்கரை ஆகிய இடங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் நீராவிக் குளியல் சிகிச்சை இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அங்கும் இதுபோல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதுபோல் மூட்டு வலி நீங்க அகச்சிவப்பு கதிர்வீச்சு சிகிச்சை, சளித்தொந்தரவு உள்ளவர்களுக்கு மூலிகை ஆவி பிடித்தல் சிகிச்சை உள்ளிட்டவையும் எர்ணாபுரம் உள்பட மேற்குறிப்பிட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள சித்த மருத்துவப் பிரிவில் அளிக்கப்படுகிறது’, என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago