சென்னை: “ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவர் ஒருவரும் ஓபிஎஸ் கருத்தை வரவேற்கவே செய்வார்கள்” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''தீயசக்தியான திமுகவை வீழ்த்துவதற்கு அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் இணக்கத்துடன் செயல்படவேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வம் கருத்தை சுயநலமற்ற, ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவர் ஒருவரும் வரவேற்கவே செய்வார்கள்.
அதேசமயம், சுயநலத்தின் உச்சமாக, பதவி வெறிபிடித்தாடும், துரோக சிந்தனை உடைய ஒரு கும்பல் நல்லதை எப்போதும் ஏற்காது என்பதும் அனைவரும் அறிந்ததே'' என்று கூறியுள்ளார்.
முன்னதாக, “முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்து அதிமுகவுக்காக உழைத்தவர்கள் சசிகலா, டிடிவி தினகரன் உள்பட யாராக இருந்தாலும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
» கேட்பாரற்று இருக்கும் தேசியக் கொடிகள்: கண்ணியமாக இறக்க நடவடிக்கை எடுக்குமா சென்னை மாநகராட்சி ?
» சென்னை வங்கிக் கொள்ளை | அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் வீட்டில் 3.5 கிலோ தங்கம் பறிமுதல்
மேலும், ‘எங்களுடைய எண்ணம், செயல் எல்லாம் இணைப்பு மட்டுமே’ என்று அவர் குறிப்பிட்டிருந்தது கவனிக்கத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
20 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago