மின் கம்பம் முறிந்து விழுந்து இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.10.71 லட்சம் இழப்பீடு: ஐகோர்ட் உத்தரவு

By செய்திப்பிரிவு

மின் கம்பம் முறிந்து விழுந்து இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.10.71 லட்சம் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்தவர் வி.செல்லம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

என் கணவர் பாண்டி, கூட்டுறவு சங்கத்தில் ஆவண எழுத்தராகப் பணிபுரிந்தார். அவர் 19.9.2010-ல் பைக்கில் சென்றபோது, சாலையிலிருந்த மின் கம்பம் முறிந்து விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 10 நாட்களுக்குப் பின்பு உயிரிழந்தார்.

என் கணவர் மீது விழுந்த மின் கம்பம் ஏற்கெனவே சேதமடைந்த நிலையில் இருந்துள்ளது. அதை மின்வாரியம் முறையாக பராமரிக்கவில்லை. இதனால் மின் கம்பம் முறிந்து பைக்கில் சென்ற என் கணவர் மீது விழுந்துள்ளது. இதனால் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க மின்வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

மின்வாரியம் கவனக்குறைவு

இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஆர்.விஜயகுமார் பிறப்பித்த உத்தரவு: மின் கம்பத்தை மின்வாரியம் சரியாக பராமரிக்காமல் விட்டுள்ளது.

இதனால் அந்த மின் கம்பம் முறிந்து விழுந்து மனுதாரரர் கணவர் இறந்துள்ளார். விபத்துக்கு மின்வாரிய அதிகாரிகளின் கவனக்குறைவே காரணமாகும். இதனால் மனுதாரருக்கு மின்வாரியம் ரூ.10.71 லட்சம் இழப்பீடு, அதற்கு 2010 முதல் தற்போது வரை ஆண்டுக்கு 6 சதவீத வட்டியும் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்