சென்னையில் வரும் 21-ம் தேதி பெண்களுக்கான கார் பந்தயம்

By செய்திப்பிரிவு

சென்னை: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மற்றும் சவேரா ஹோட்டல் இணைந்து நடத்தும் பெண்களுக்கான கார் பந்தயம் வரும் 21-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

இது தொடர்பாக சென்னையில் நேற்று மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் உறுப்பினர்கள் அமித், லீனா ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாட்டின் 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில், ‘சுதந்திரம்’ என்ற தலைப்பில் 19-வது ஆண்டாக பெண்களுக்கான கார் பந்தயம் நடத்தப்படுகிறது.

வரும் 21-ம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்கும் இப்போட்டிக்கான முன்பதிவு தற்போது தொடங்கி உள்ளது. இப்போட்டியில் பங்கேற்கும் பெண்கள், கொடுக்கப்பட்ட வழித்தடத்தில், குறிப்பிட்ட வேகத்தில் மட்டுமே காரை இயக்க வேண்டும். செல்லும் வழியில் போட்டியாளர்களுக்கு வழங்கப்படும் சவால்களை சரியான முறையில் முடிக்க வேண்டும்.

கண்டிப்பாக போக்குவரத்து விதிகளைக் கடைபிடிக்க வேண்டும். இதில், 12 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவரும் பங்கேற்கலாம். அதேபோல, காரை ஓட்டுபவர் கட்டாயம் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். இப்போட்டியில் 100 கார்களில், 400 பேர் வரை பங்கேற்பர் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்