உடல்நலக்குறைவுடன் தென்பட்ட யானையை தேடும் வனத்துறையினர்: 2 கும்கி யானை உதவியுடன் சிகிச்சை அளிக்க திட்டம்

By செய்திப்பிரிவு

கோவை: உடல்நலக்குறைவுடன் தமிழக - கேரள எல்லையில் தென்பட்ட யானை, வனப்பகுதிக்குள் சென்று மறைந்ததால், அைத கண்டறிந்து சிகிச்சை அளிக்க தமிழக, கேரள வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக பணியாளர்கள் கேரள-தமிழக எல்லையான ஆனைகட்டி, சீங்குளி பழங்குடியின கிராமம் அருகே கொடுந்துறைப்பள்ளம் ஆற்றங்கரையில் 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்றை நேற்றுமுன்தினம் பார்த்துள்ளனர்.

அந்த யானை உடல்நலம் குன்றியிருந்ததால் வனப் பணியாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். கேரளாவைச் சேர்ந்த வனப்பணியாளர்கள் குழுவும் கண்காணித்து வந்தது.

கொடுந்துறைப்பள்ளத்தின் இருபுறமும் சிறிது தூரம் யானை நடந்து செல்வது நேற்று முன்தினம் தெரிந்தது. இந்நிலையில், நேற்று அதிகாலை 2 மணியளவில் கேரளா புதூர், தாசனூர் மேடு பகுதிக்கு யானை சென்றது. அதன்பிறகு, வனப்பணியாளர்களுக்கு யானை தென்படவில்லை.

இதையடுத்து, யானையை வனத்துறையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.யானையின் வாயில் காயம் இருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இதுதொடர்பாக வனத் துறையினர் கூறும்போது, “தமிழக, கேரள வனத்துறையினர் 4 குழுக்களாக பிரிந்து யானையைத் தேடி வருகின்றனர். பொள்ளாச்சி, டாப்சிலிப்-ல் இருந்து 2 கும்கி யானைகளை கொண்டு வந்து, அவற்றின் உதவியுடன், 2 கால்நடை மருத்துவர்கள் மூலம் சிகிச்சை தர முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

39 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்