கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்: விடுதிகளில் தங்குவதற்கு இடமில்லாததால் காரிலேயே தங்கினர்

By செய்திப்பிரிவு

கொடைக்கானல்: தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்ததால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கொடைக்கானலில் சீசன் நேரங்களில் மட்டுமின்றி, வார விடுமுறை நாட்களிலும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், சனி, ஞாயிறு, திங்கள் (சுதந்திர தினம்) என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வந்ததால் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் பல மடங்கு அதிகரித்தது. கட்டுக்கடங்காமல் குவிந்த கூட்டத்தால் திரும்பிய பக்கமெல்லாம் மனித தலைகளாகவே தெரிந்தன.

கடந்த 3 நாட்களாக கொடைக்கானல் நகர் பகுதியிலும், முக்கிய சுற்றுலாத் தலங்களிலும் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

விடுதிகளில் தங்க முன்பதிவு செய்யாமல் வந்த பலர் தங்குவதற்கு இடமின்றி இரவு நேரத்தில் கார்களிலேயே தூங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் பலர் குளிரில் நடுங்கினர்.

மோயர் பாய்ண்ட், தூண்பாறை, குணா குகை, பைன் பாரஸ்ட், பிரையண்ட் பூங்கா, ரோஸ் கார்டன் ஆகிய பகுதிகளில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. மூஞ்சிக்கல், அப்சர்வேட்டரி பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.

நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஏரியில் படகு சவாரி செய்ய ஏராளமானோர் பல மணி நேரம் காத்திருந்தனர். இதனால் பலர் படகு சவாரி செய்யாமலேயே திரும்பிச் சென்றனர்.

போக்குவரத்தை சீரமைக்க வாரவிடுமுறை நாட்களில் கூடுதல் போலீஸாரை மலைப் பகுதிக்கு அனுப்ப வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும், அது தொடர்பாக மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுப்பதில்லை.

இதனால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். நெரிசலை தடுக்க தேவையான நடவடிக்கைகளை காவல்துறை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்