சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி நேற்று முன்தினம் தாக்கல் செய்த மனுவில், ‘முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் குறித்து அடிக்கடி வதந்திகள் பரவுகின்றன. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்த உண்மை நிலவரங்களை உடனடியாக மக்களுக்கு தெரியப் படுத்த புகைப்பட ஆதாரங்களுடன் தமிழக அரசு அறிக்கை வெளியிட வேண்டும். அதுபோல முதல்வர் பரிபூரணமாக குணமடைந்து பணிக்கு திரும்பும் வரை அரசின் அத்தியாவசிய பணிகளைக் கவனிப்பதற்காக தற்காலிக முதல்வரை நியமிக்க வேண்டும்’ என கோரியிருந்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக் காக பட்டியலிடப்படவில்லை. இதனால் டிராஃபிக் ராமசாமி, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இது குறித்து முறையிட்டு இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
அப்போது நீதிபதிகள் அங்கு இருந்த கூடுதல் தலைமை வழக் கறிஞர் சி.மணிசங்கரிடம், ‘‘ஏன் முதல்வரின் உடல்நலம் குறித்து பொதுமக்களுக்கு எதுவும் தெரிவிக்கவில்லை?” என கேள்வி எழுப்பினர்.
அதற்கு கூடுதல் தலைமை வழக்கறிஞர், ‘‘முதல்வருக்கு ஏற் பட்ட உடல்நல பாதிப்பும், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதும் அவரது தனிப்பட்ட அந்தரங்க விஷயம். இதையெல் லாம் பகிரங்கப்படுத்தக் கோர முடியாது’’ என்றார்.
அதற்கு நீதிபதிகள், ‘‘முதல்வ ருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு என்பது அவரது தனிப்பட்ட விஷய மாக இருந்தாலும், அவர் ஒட்டு மொத்த தமிழகத்தின் முதல்வர். அவரது உடல்நலம் குறித்து அக் கறை கொள்வதற்கும், உண்மை நிலவரங்களை தெரிந்துகொள் வதற்கும் பொதுமக்கள் ஆர்வம் காட்டத்தான் செய்வார்கள். அந்த விவரங்களை பொதுமக்களுக்கு கண்டிப்பாக தெரியப்படுத்த வேண் டியது அரசின் கடமை’’ என்றனர்.
அப்போது குறுக்கிட்ட கூடுதல் தலைமை வழக்கறிஞர், ‘‘அதற்காகத்தான் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அவ் வப்போது முதல்வரின் உடல் நலம் குறித்த விவரங்களை அறிக்கையாக பத்திரிகைகளுக்கு வழங்கி வருகிறது’’ என்றார்.
அதற்கு நீதிபதிகள், ‘‘அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட் டாலும், தமிழக அரசு ஏன் இது வரை எந்தவொரு அறிக்கையும் வெளியிடாமல் அமைதியாக உள்ளது? முதல்வர் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெறுகிறார் என்றால், அரசின் முக்கிய முடிவுகளை யார் எடுக் கிறார்கள் என்பதை ஏன் மக்களுக்கு தெரியப்படுத்தவில்லை? தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரி கள் இதுகுறித்து ஏன் பொது மக்களுக்கு விளக்கம் அளிக்க வில்லை?’’ என தொடர்ச்சி யாக கேள்வி எழுப்பினர்.
அதற்கு கூடுதல் தலைமை வழக்கறிஞர் சி.மணிசங்கர், “இது தொடர்பாக தமிழக அரசின் கருத்தைக் கேட்டு தெரிவிக்கிறேன்” என்றார்.
அதையேற்ற நீதிபதிகள், இது தொடர்பாக வரும் 6-ம் தேதிக்குள் தமிழக அரசின் பதிலை தெரி விக்க வேண்டும் எனக்கூறி அன் றைக்கு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக கூறினர்.
முதல்வர் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெறுகிறார் என்றால், அரசின் முக்கிய முடிவுகளை யார் எடுக் கிறார்கள் என்பதை ஏன் தெரியப்படுத்தவில்லை?
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
20 hours ago