நாடு முழுவதும் மெட்ரோ ரயில்களில் ஒரே மாதிரியான கட்டணத்தை அமல்படுத்த ஆலோசனை

By செய்திப்பிரிவு

சென்னை: ரயில்வேயில் இருப்பதுபோல், நாடு முழுவதும் உள்ள எல்லா மெட்ரோ ரயில்களிலும் ஒரே மாதிரியான கட்டண முறையை கொண்டு வர, மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம், குழு அமைத்து ஆலோசனை நடத்தி வருகிறது.

நாட்டில் சென்னை உட்பட 20 நகரங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும், 19 நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. இருப்பினும், மெட்ரோ ரயில் கட்டணத்தில் பல்வேறு முரண்பாடு இருப்பதாக பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஒரு குழுவை அமைத்து ஆலோசனை நடத்தி வருகிறது. இதில், எல்லா மெட்ரோ ரயில் நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்களும் உறுப்பினர்களாக இருந்து கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

எனவே, ரயில்வேயில் இருப்பது போல, கிலோ மீட்டர் தூரத்தை கணக்கீட்டு, எல்லா மெட்ரோ ரயில் நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரியான கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது. பெரிய நகரங்களுக்கு ஒரு வகையான கட்டணமும், சிறியநகரங்களுக்கு சற்று குறைவான கட்டண முறையையும் கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது என்று மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்