சென்னை: "அன்றாடச் செய்திகளின் குரலாக நுழைந்து, வரலாற்றின் குரலாக நிலைத்து நின்றுவிட்டது சரோஜ் நாராயண்சுவாமியின் குரல்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: "அன்றாடச் செய்திகளின் குரலாக நுழைந்து, வரலாற்றின் குரலாக நிலைத்து நின்றுவிட்டது சரோஜ் நாராயண்சுவாமியின் குரல்.
மறக்கவொண்ணா நிகழ்வுகளோடு பின்னிப் பிணைந்த அக்குரல் நேற்றோடு ஒலிப்பதை நிறுத்திக்கொண்டு விட்டது அறிந்து வேதனையடைந்தேன்.எனது ஆழ்ந்த இரங்கல்கள்" என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, அகில இந்திய வானொலியில் தமிழ் செய்திப் பிரிவில் பல ஆண்டுகளாக பணியாற்றியவர் சரோஜ் நாராயணசுவாமி. டெல்லியின் தமிழ் பிரிவில் பணியாற்றி வந்த இவர் கடந்த 1995-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
இந்நிலையில், மும்பையில் வசித்துவந்த சரோஜ் நாராயண் சுவாமி முதுமை காரணமாக, நேற்று காலமானார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago