தரமான தலைக்கவச விற்பனையை உறுதி செய்ய, கட்டாயமாக ஐஎஸ்ஐ முத்திரை பெற வேண்டிய பொருட்களின் பட்டியலில் அதை இணைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மத்திய அரசின் இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்) இந்தியாவிலுள்ள பொருட்களைத் தர நிர்ணயம் செய்து சான்றிதழ் வழங்குகிறது. இப்படி ஐஎஸ்ஐ முத்திரை வழங்குவதில் இரண்டு விதங்கள் உள்ளன. ஒன்று விருப்பத்தின் அடிப்படையிலானது, மற்றொன்று கட்டாய ஐஎஸ்ஐ முத்திரை.
பாதுகாப்பு, அதிகபட்ச நுகர்வு, உடல்நலன் சார்ந்த பொருட் களான சிமெண்ட், மின் கம்பங் கள், பால்பவுடர் உள்ளிட்ட 110 பொருட்களுக்குத் தரச் சான்று பெறுவது கட்டாயமாக் கப்பட்டுள்ளது. இதன்படி, அந்த 110 பொருள்களையும் இந்திய தர நிர்ணய அமைவனம் வழங்கும் ஐஎஸ்ஐ முத்திரையைப் பெற்றுத்தான் விற்க முடியும்.
ஆனால், ஐஎஸ்ஐ முத்திரை கட்டாயமில்லாத பொருட்களுக்கு அப்படியில்லை. பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் தங்களுடைய பொருள் தரமானது என்று கூறி விற்க, தாமாக முன்வந்து ஐஎஸ்ஐ முத்திரையைப் பெற்றுக்கொள்ளலாம். கட்டாய ஐஎஸ்ஐ முத்திரைப் பட்டியலில் தலைக்கவசம் இல்லாததால், அதற்கு உற்பத்தியாளர்கள் கட்டாயம் முத்திரை பெற வேண்டிய நிலை இல்லை.
தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜூலை முதல் இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, சில மாதங்கள் தலைக்கவசம் அணியாதவர்கள் மீது போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்தனர். பின்னர், போலீஸாரின் தீவிரம் குறைந்தது.
தற்போது மீண்டும், தலைக்கவசம் அணியாதவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சென்னையில் இதற்காக 65,000-க்கும் மேற்பட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தினந்தோறும் சராசரியாக 1,500 முதல் 2,000 வழக்குகள் வரை போலீஸார் பதிவு செய்து வருகின்றனர். எனவே, போலீஸார் பார்க்கும்போது தலைக்கவசம் இருக்க வேண்டுமே என்பதற்காக, சாலை ஓரங்களில் விற்கப்படும் தலைக்கவசங்களை மக்கள் குறைந்த விலைக்கு வாங்கி அணிகின்றனர். இதனால், தலைக்கவசத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
தண்டிக்க முடியாது
இதுதொடர்பாக இந்திய தர நிர்ணய அமைவன (பிஐஎஸ்) அலுவலகத்தில் விசாரித்தபோது, பிஐஎஸ் அதிகாரிகள் கூறியதாவது: “தலைக்கவசத்துக்கான ஐஎஸ்ஐ குறியீடு IS:4151 என்பதாகும். இது ஒவ்வொரு தலைக்கவசத்திலும் ஐஎஸ்ஐ முத்திரைக்கு மேல் குறிப்பிடப்பட்டிருக்கும். இதுதவிர, ஐஎஸ்ஐ முத்திரைக்குக் கீழ் CM/L-XXXXXXX (7 இலக்க உரிம எண்) குறிப்பிடப்பட்டிருக்கும். இவ்வாறு ஐஎஸ்ஐ முத்திரையுடன் வாங்கிய தலைக்கவசத்தின் தரத்தில் குறை பாடுகள் இருந்தால், 044-22541442, 22542519, 22541216 ஆகிய தொலை பேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் அல்லது புகார் குறித்த விவரங்களை sro@bis.org.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். மேலும், முறையான உரிமம் பெறாமல் ஐஎஸ்ஐ முத்திரையைத் தவறாக பயன்படுத்துவோருக்கு ரூ.50,000 வரை அபராதமும், ஓராண்டு சிறை தண்டனையும் வழங்க சட்டம் உள்ளது.
அதேநேரத்தில் ஐஎஸ்ஐ முத்திரையே இல்லாமல் விற்கப் படும் தலைக்கவசம் உள்ளிட்ட பொருள்கள் குறித்து நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாது. தலைக்கவசத்துக்குக் கட்டாயமாக ஐஎஸ்ஐ முத்திரையை இடம் பெறச்செய்வது குறித்து மத்திய, மாநில அரசுகள்தான் முடிவு செய்யவேண்டும்”. இவ்வாறு அவர் கூறினார்.
வாடிக்கையாளர்கள் வாகனம் வாங்கும்போதே இருசக்கர வாகன தயாரிப்பாளர்கள் தலைக் கவசத்தையும் அளிக்க வேண்டும் என விதிகள் உள்ளதாக வழக்கறிஞர் வி.எஸ்.சுரேஷ் தெரி வித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறும்போது, “மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989, பிரிவு 138 (4) (எஃப்)-ன்படி ‘இரு சக்கர வாகனத்தைத் தயாரிப் பவர்கள் வாகனத்தை விற்பனை செய்யும்போது தலைக் கவசத்தை யும் அளிக்க வேண்டும்' என்று கூறுகிறது. ஆனால், எந்த வாகன தயாரிப்பு நிறுவனமும் இதைப் பின்பற்றுவதில்லை. மேலும், தலைக்கவசத்துக்கு ஐஎஸ்ஐ முத்திரை கட்டாயமில்லாததால், ஐஎஸ்ஐ முத்திரை இல்லாமல் அதை உற்பத்தி செய்பவர்களையும், விற்பவர்களையும் சட்டப்படி தண்டிக்க இயலாது. எனவே, தர மான தலைக்கவசங்கள் விற் பனையை உறுதி செய்ய ஐஎஸ்ஐ முத்திரையை அரசு கட்டாயமாக்க வேண்டும். மேலும், வட்டார போக்கு வரத்து அலுவலகங்களில் வாகனத்தை பதிவு செய்யும்போது எப்படி காப்பீட்டை கட்டாயமாக பார்க்கிறார்களோ, அதேபோன்று தலைக்கவசமும் கட்டாயமாக இருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்”என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago