இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இந்தியா வருகை தந்துள்ள நிலையில் 5 தமிழக மீனவர்களை இலங்கை சிறைபிடித்திருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகாதாப்பட்டினத்தை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான படகில் தங்கமணி, பிரதீப், அருண், சண்முகவேல், கோபு ஆகிய 5 மீனவர்கள் திங்கட்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை நெடுந்தீவு அருகே பாக் ஜலசந்தி நீரிணைப்பில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடல் கடற்பகுதிக்குள் மீன்பிடித்ததாகக் கூறி விசைப்படகை கைப்பற்றி 5 மீனவர்களையும் சிறைபிடித்தனர். சிறைபிடிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களும் இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்பாணம் சிறைச்சாலையில் அடைக்கப்படுவர்.
செவ்வாய்க்கிழமை இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மூன்று நாள் பயணமாக வந்துள்ள நிலையில் தமிழக மீனவர்களை சிறைபிடித்திருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
16 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago