சாத்தூர் துப்பாக்கிச் சூடு: நீதிமன்றத்தில் ஒருவர் சரண்

By இ.மணிகண்டன்

விருதுநகரில் ஓடும் பேருந்தில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ஒருவர் சரணடைந்துள்ளார். இதுதவிர 9 பேரை பிடித்த போலீஸ் தனிப்படை அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் ஓடும் பேருந்தில் இளைஞர் ஒருவர் நேற்று (புதன்கிழமை) சுட்டுக் கொல்லப்பட்டார். உடனடியாக பேருந்தில் இருந்து குதித்த கொலையாளி தப்பி ஓடிய சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக 9 பேரை பிடித்து வைத்து 5 தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரபீக் சரண்:

கொலையில் தொடர்புடையவர்களாக தேடப்பட்டு வந்த கோவில்பட்டியைச் சேர்ந்த அப்துல்லாவின் தந்தை முகமதுரபீக் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் சரணடைந்தார்.

முன்விரோதம் காரணமா?

சுட்டுக் கொல்லப்பட்ட கருப்பசாமி, கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றினார். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு ஜனனி பிரியா என்ற ஒரு வயது குழந்தை உள்ளது. கவிதா தற்போது கர்ப்பமாக உள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் மோட்டார் சைக்கிளை இடித்தது தொடர்பாக கருப்பசாமியின் அண்ணன்களுக்கும் அவர்களது நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தத் தகராறில், கடந்த ஜூலை 2-ம் தேதி கோவில்பட்டியில் அப்துல்லா என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கருப்பசாமியின் அண்ணன்கள் மந்திரமூர்த்தி, கனகராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். மேலும் இவர்கள் குண்டர் சட்டத்திலும் அடைக்கப்பட்டனர்.

இதில் ஏற்பட்ட ஆத்திரத்தில் காந்தாரி குடும்பத்தினர் சிக்கினால் கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், விடுமுறைக்காக கோவில்பட்டி வந்த கருப்பசாமி மீண்டும் நேற்று கோயம்புத்தூருக்குப் புறப்பட்டுள்ளார். அப்போது, அப்துல்லாவின் கொலைக்கு பழிக்குப் பழி வாங்கும் விதத்தில் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டதாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்