சென்னை: ஆசிரியர் பணிக்கான டெட் முதல்தாள் தேர்வு செப்டம்பர் 10 முதல் 15-ம் தேதி வரை நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
அனைத்துவித பள்ளிகளிலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறவேண்டும். இந்த டெட் தேர்வு மொத்தம் 2 தாள்களை கொண்டது. முதல்தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம். தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் டெட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தாண்டு டெட் தேர்வு இருகட்டங்களாக நடத்தப்பட உள்ளது.
முதல் தாளுக்கான தேர்வு ஆகஸ்ட் 25 முதல் 31-ம் தேதி வரை கணினி வழியாக நடைபெறும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டது. தற்போது நிர்வாக காரணங்களால் டெட் தேர்வு (முதல் தாள்) செப்டம்பர் 10 முதல் 15-ம் தேதி வரை நடத்தப்படவுள்ளது. தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்னர் இந்த தேர்வுக்கான பயிற்சியை டிஆர்பி இணையதளத்தில் தேர்வர்கள் மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்படும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
50 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago