காலையில் புலி வேஷம் கட்டி வீர விளையாட்டுகளுடனும் மாலை யில் பெண் பார்க்கும் படலமாகவும் பாரம்பரியமாகக் கொண்டாடப்படும் மகர்நோன்பு திருவிழா விருதுநகரில் நேற்று நடைபெற்றது.
சங்க காலம் முதல் வீர விளை யாட்டுகளில் தமிழர்கள் தலைசிறந்த வர்களாக இருந்து வருகின்றனர். இளைஞர்களின் வீரத்தை நிரூபிப் பதற்காகவும், வீட்டுக்குள்ளேயே இருக்கும் பெண்களை வெளியில் அழைத்துவந்து ஊரார் பார்க்கச் செய்வதற்காகவுமே முன்னோர்கள் திருவிழாக்களை நடத்தினர்.
ஆனால், மாற்றங்கள் பல வந்தா லும், இளைஞர்களின் வீரத்தை நிரூபிக்கும் வகையில் வீர விளை யாட்டுகளுடனும், பெண் பார்க்கும் படலத்துடனும் நடத்தப்படும் விநோத மகர்நோன்பு திருவிழா விருதுநகரில் பாரம்பரியமாக இன்றளவும் நடத்தப்பட்டு வருகிறது. நவராத்திரி விழா நிறைவு நாளான விஜயதசமியன்று இத்திருவிழா அனைத்து சமுதாயத்தினராலும் கொண்டாடப்படுகிறது.
விருதுநகரில் பராசக்தி மாரியம் மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழாவை அடுத்து நடத்தப்படும் பெரிய விழா இந்த மகர்நோன்பு திருவிழா. விஜயதசமி நாளில் துர்க்கை, அசுரனை வதம் செய்வ தைக் கொண்டாடும் வகையில் இவ்விழா நடத்தப்பட்டது.
காலையில் தேவர் இனத்தவர், யாதவர் இனத்தவர், நாயக்கர் இனத்தவர் தங்கள் இனத்தவர்களில் குறிப்பிட்ட ஒரு வரைத் தேர்ந்தெடுத்து அவருக்குப் புலி வேடமிட்டு தங்கள் பகுதி யிலிருந்து மதுரை சாலையில் வாணவேடிக்கைகளுடன் ஊர்வல மாக அழைத்து வந்தனர்.
புலி வேடமிட்ட அந்த நபர் தனக்குத் தெரிந்த வித்தைகள் அனைத்தையும் ஊர்வலத்தின் போது செய்து காட்டினர். அவரோடு வந்த இளைஞர்கள் சிலம்பம் சுற்றிக்கொண்டும், குஸ்தி போட்டுக் கொண்டும் வந்தனர்.
அவர்களுடன் அச்சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், சிறுவர், பெரியவர்களும் கலந்து கொண்டு ஊர்வலமாக வந்தனர். அவர்கள் மேற்கு காவல் நிலையம் முன் புலியாட்டம் ஆடியதுடன், சிலம்பாட்டமும் நடத்தி மரியாதை செய்தனர்.
அதே நேரம், மதுரை சாலை யில் நந்தவனம் அருகே அமைக்கப் பட்டுள்ள பந்தலில் குதிரையில் அமர்ந்தபடி சொக்கநாத சுவாமி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். மழை பெய்ய வேண்டியும், விவசாயம், தொழில்கள் சிறக்க வேண்டியும், ஊர் நன்மைக்காகவும் அம்புவிடும் நிகழ்ச்சியும் நடைபெற் றது.
தொடர்ந்து, மாலையில் நாடார் சமூகத்தினர் புலி வேடமிட்ட நபருடன் ஊர்வலம் வந்தனர். அச்சமூகத்தைச் சேர்ந்த ஆயிரக் கணக்கானோர் மதுரை சாலையிலுள்ள நந்தவனத்திலும் கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்திலும் கூடியிருந்தனர். இது நாடார் சமூகத்தின ருக்கான பெண் பார்க்கும் படல நிகழ்ச்சியாக இருந்தது.
திருமணமாகாத இளம் பெண்கள் நூற்றுக்கணக்கானோருடன் பலர் குடும்பம் குடும்பமாக ஆங்காங்கே அமர்ந்திருந்தனர். உறவினர்கள் மூலம் மாப்பிள்ளை வீட்டார் திருமணத்துக்குத் தயாராக உள்ள பெண்கள் பற்றியும், பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாரைப் பற்றியும் உடன் வந்திருந்த உறவினர்கள் மூலம் ஒருவருக்கொருவர் விசாரித்துக்கொண்டனர்.
இதுகுறித்து, திருவிழாவில் பங்கேற்ற பாண்டியராஜன்(69) கூறியதாவது:
விழாவின்போது, யார் வீட்டில் பெண் உள்ளனர் என்பதை மாப்பிள்ளை வீட்டார் பார்த்துக் கொள்வர். வீட்டைவிட்டு வெளியே வராத பெண்கள் பலரும் இத் திருவிழாவுக்கு அழைத்துவரப் படுவர். திருவிழாவின்போது மாப் பிள்ளை வீட்டார் ஜாடைமாடையாக பெண்ணையும் பார்த்துக்கொள்வர். பின்னர், அவரவர் வீடுகளுக்குச் சென்றபின் யாரைப் பேசி முடிக்க லாம் என்று தீர்மானித்து பெண் பார்க்கச் சென்று பேசி முடித்து சம்பந்தம் செய்துகொள்வர். பல ஆண்டுகளாக பாரம்பரியமாக இந்த விழா நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
47 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
7 hours ago