வீட்டு உபயோகப் பொருட்களால் ஆன குதிரை மீது காட்சி அளிக்கும் வரதராஜ பெருமாள் சிலை தயாரிப்பு: 85 வயது முதியவரின் வியக்கவைக்கும் தன்னார்வம்

By கோ.கார்த்திக்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலின் மேற்கு ராஜகோபுரத்தின் இடது புறத்தில், முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் வீட்டுக்குச் செல்லும் சாலையில் வசிப்பவர் சுந்தரராஜன்(85). இவர், பயனற்ற வீட்டு உபயோகப் பொருட்களைக் கொண்டு வரதராஜ பெருமாள் மற்றும் அவரது உற்சவ வாகன சிலைகளைத் தயாரித்து வருகிறார். ஆண்டுதோறும் சிலைகளைத் தயாரித்து அவற்றை நவராத்திரி கொலுவில் வைத்து வழிபட்டு வருகிறார்.

இதுகுறித்து, சுந்தரராஜன் கூறியதாவது: எனது தாயார் பத்மா, சிறுவயது முதலே கைவினை பொருட்கள் தயாரிப்பது வழக்கம். நானும் பொழுதுபோக்குக்காக ஏதேனும் பொருட்களை தயாரித்து வீட்டில் அழகுக்காக வைப்பேன். இதற்காக, வீட்டு உபயோக பிளாஸ்டிக் பொருட்கள், அட்டை பெட்டிகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவேன்.

இவ்வாறு பல்வேறு பொருட் களைத் தயாரித்து வந்தபோது, வரதராஜ பெருமாள் சிலையைத் தயாரித்து நவராத்திரி கொலு வைக்க ஆசைப்பட்டேன். 2009-ம்ஆண்டு முதல் இந்த பணியில் ஈடுபட்டேன். முதலில் மெழுகு பொருளைப் பயன்படுத்தி உற்சவர் வரதராஜ பெருமாள் சிலையைத் தயாரித்தேன்.

சிலை தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக, உற்சவரின் முகத்தில் உள்ள தழும்புகளைக் கூட சிலையில் அமைத்தேன்.

பல்வேறு உற்சவ வாகனங்களைத் தயாரித்து அதன் மீது பெருமாள் சிலையை அமர்த்தினேன். விளையாட்டு மற்றும் அலங்கார பொருட்களைப் பயன்படுத்தி, உற்சவருக்கான அங்கவஸ்திரங்கள் மற்றும் அலங்கார அட்டிகைகளைத் தயாரித்தேன்.

தெர்மோகோல், அட்டை பெட்டி கள், பயனற்ற பிளாஸ்டிக் பக்கெட் உள்ளிட்ட பொருட்களைப் பயன்படுத்தி வாகன உருவச் சிலைகளைத் தயாரித்தேன். இந்தச் சிலைகளை நவராத்திரி கொலுவாக வீட்டில் அமைத்து வழிபாடு செய்வேன். வழக்கமாக அனைவரது வீடுகளிலும், படிகள் போன்ற அமைப்பை ஏற்படுத்தி அதில் சின்னச் சின்ன சிலைகளை வைத்து, கொலு அமைப்பார்கள். நான் வரதராஜ பெருமாளைப் பெரியளவில் தயாரித்து கொலு வைத்துள்ளேன். பெருந்தேவி தாயார், மூலவர் தேவராஜஸ்வாமி சிலை, சீதா ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் உள்ளிட்ட சிலை களையும் தயாரித்துள்ளேன்.

உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள் வாங்கினால் அதனுடன் தரப்படும் கருப்பு பிளாஸ்டிக் பைககளின் மூலம் பெருமாள் மற்றும் தாயாரின் முகங்களை உருவாக்கினேன்.

நவராத்திரியை முன்னிட்டு ஜூன் மாதம் முதலே இவற்றை செய்யத் தொடங்குவேன். இதற்காக, எனது மகள் மற்றும் உறவினர்கள் தேவையற்ற பொருட்களைத் தூக்கி வீசாமல் என்னிடம் தருகின்றனர்.

கொலு நாட்கள் முடிந்ததும் வீட்டின் மாடியில் அனைவரும் பார்த்து ரசிக்கும் வண்ணம் வைப்பேன். சிறிது நாட்களுக்கு பிறகு அந்த சிலையைக் கலைத்து விடுவேன். அனைத்து சிலைகளையும் வைப்பதற்கு வீட்டில் இடமில்லை.

சிலைகள் தயாரிக்கும் பணிகளில் மனைவி நிர்மலா உதவி செய்வார். இந்தச் சிலைகளை, பள்ளி மாணவர்கள் மற்றும் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வரும் ஆன்மீக சுற்றுலா வாசிகள் கண்டு ரசிப்பது வழக்கம். நவராத்திரி கொலுவின் போது, அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்துச் செல்வர். இவ்வாறு சுந்தரராஜன் கூறினார்.

85 வயது முதியவரின் தன்னார்வம் அப்பகுதி மக்களை ஆச்சர்யப்படுத்தி வருகிறது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்