வழிகாட்டிப் பலகை விழுந்த விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம்: அமைச்சர் சிவசங்கர் நேரில் வழங்கினார்

By செய்திப்பிரிவு

ஆலந்தூரில் பேருந்து மோதி வழிகாட்டிப் பலகை விழுந்ததில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதை தொடர்ந்து, அமைச்சர் சிவசங்கர் நேரில் பணத்தை வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டசெய்திக்குறிப்பு: கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதிபெருங்களத்தூரில் இருந்து கோயம்பேடு நோக்கிச் சென்று கொண்டிருந்த மாநகர போக்குவரத்துக் கழக பேருந்து ஜிஎஸ்டி சாலையில் ஆலந்தூர்- ஆசர்கானா பேருந்து நிறுத்தம் முன்னதாக செல்லும்போது, சாலையின் அருகில் இருந்த வழிகாட்டிப் பலகையில் மோதியது.

இதனால் வழிகாட்டிப் பலகை சாலையில் விழுந்தது. அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பி.சண்முகசுந்தரம் (28) பலத்த காயமுற்று நேற்று அதிகாலை உயிரிழந்தார்.

இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். அத்துடன் போக்குவரத்துக் கழக நிதியில் இருந்து ரூ.1 லட்சம், முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் என மொத்தம் ரூ.3 லட்சம் நிவாரணமாக வழங்க முதல்வர்உத்தரவிட்டார்.

இதன்படி போக்குவரத்துத் துறை அமைச்சர்எஸ்.எஸ்.சிவங்கர் இந்நிதியை நேரில் சென்று வழங்கினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

35 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்