ஈரோட்டில் ‘சீல்’ வைக்கப்பட்ட தனியார் மருத்துவமனையின் உள் நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றம்

By செய்திப்பிரிவு

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, ஈரோட்டில் சீல் வைக்கப்பட்ட தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உள் நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் கருமுட்டை பெற்ற விவகாரத்தில், ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்க ஜூலை 15-ம் தேதி சுகாதாரத் துறை உத்தரவிட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உள்நோயாளிகளை வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றும் வகையில் 15 நாள் அவகாசம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், மருத்துவமனை நிர்வாகம் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்ததில், மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சுகாதாரத் துறை மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டதை உறுதி செய்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சுகாதாரத் துறை இணை இயக்குநர் பிரேமகுமாரி தலைமையிலான அதிகாரிகள் தனியார் மருத்துவமனையின் 10 ஸ்கேன் இயந்திரங்களுக்கு சீல் வைத்தனர்.

மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 94 நோயாளிகளில் முதல்கட்டமாக 46 நோயாளிகள் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். தொடர்ந்து நேற்று 48 நோயாளிகள் வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து, நேற்று மதியம் மருத்துவமனையை முழுவதுமாக மூடி சுகாதாரத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்