சென்னை: தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 14 அரசு மற்றும் ஒரு தனியார் சட்டக் கல்லூரிகளில் உள்ள, ஒருங்கிணைந்த 5 ஆண்டு பி.ஏ.. எல்.எல்.பி. படிப்புகளுக்கு 1,731 இடங்கள் உள்ளன.
இதுதவிர, சென்னை பெருங்குடி வளாகத்தில் அமைந்துள்ள சீர்மிகு சட்டப் பள்ளியில் 5 ஆண்டு ஹானர்ஸ் படிப்புக்கு 624 இடங்கள் உள்ளன. இவை நடப்பாண்டு இணையவழி கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஜூலை 12-ல் தொடங்கி, 29-ம் தேதி வரை நடைபெற்றது.
விண்ணப்பித்தவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் விவரங்களை, அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நேற்று முன்தினம் வெளியிட்டது. அந்த விவரங்களை http://www.tndalu.ac.in/ என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.
» தமிழகத்தில் அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும்: எல்.முருகன் வேண்டுகோள்
» சென்னை | இளைஞரை கொலை செய்த ஆட்டோ ஓட்டுநருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
இதையடுத்து, அசல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி இன்று (ஆக. 8) முதல்வரும் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்ததும், தகுதியான மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை வரும் 13-ம் தேதி வழங்கப்படும். அவ்வாறு ஆணை பெற்றவர்கள், தேர்வுசெய்த படிப்புகளில் ஆகஸ்ட் 16 முதல் 18-ம் தேதிக்குள் சேர வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago