கரூர்: தமிழகத்தில் 100-க்கும் மேற்பட்ட உழவர் சந்தைகள் தினமும் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒரு உழவர் சந்தை மாலை நேரத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதிநிலை அறிக்கையின்போது உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டார்.
அதன்படி, ஆக.12-ம் தேதி முதல் மாவட்டத்துக்கு ஒரு உழவர் சந்தை வீதம் 37 இடங்களில் (சென்னை தவிர) தினமும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட உள்ளன.
இங்கு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் சிறுதானியங்கள், பயறு வகைகள் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படும். ஆக.12-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் இவற்றை திறந்து வைக்கிறார்.
திருச்சி, தஞ்சாவூர், கரூர் உள்ளிட்ட சில இடங்களில் முன்னோட்டமாக மாலை நேர உழவர் சந்தைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
16 mins ago
தமிழகம்
25 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
11 hours ago