புதுச்சேரி: நம் நாட்டின் 75-வதுசுதந்திர தினம் மற்றும் அரவிந்தரின் 150வது பிறந்த தின கொண்டாட்டத்தையொட்டி ‘பாரத் சக்தி பாண்டி லிட் பெஸ்ட்-2022’ விழா புதுச்சேரியில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று மாலை நடைபெற்றது.
விழாவை புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது: நாடு முழுவதும் நாட்டின் 75-வதுசுதந்திர அமுதப்பெருவிழாவை சிறப் பாக கொண்டாட பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
நம் நாட்டின் முன்னேற்றத்துக்கு சுதந்திரப் போராட்ட வீரர்கள் தியாகம் முக்கியத்தும் பெறுகி றது. ஆன்மிக பூமியாக புதுச் சேரி திகழ்கிறது. இங்கே ஆன்மிகஎழுச்சி மூலம் தலைவர்கள் சுதந்திர தாகத்தை ஊட்டினர். அரவிந்தரின் ஆன்மிக சேவை குறித்து பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார். தமிழ கம் வரலாற்று தியாகங்களை புரிந்த தலைவர்களைக் கொண்டுள்ளது.
» காவிரியில் வெள்ளப்பெருக்கு: ஈரோட்டில் 600 வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து பாதிப்பு
» “இலங்கையில் சீனாவின் உளவுத்துறைக் கப்பல்... இந்திய பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல்” - சீமான்
இளம் தலைமுறையினர் தியாகிகளின் வரலாறுகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். வீரமங்கை வேலுநாச்சியார், ஜான்சிராணி போன்றோர் கடினமான சூழ்நிலையிலும் சுதந்திரத்துக்குப் பாடுபட்டுள்ளனர். பிரதமர் மோடி தலைமையிலான அரசு இதுபோன்ற சுதந்திர வீரர்களை தெரிந்து கொண்டு, மரியாதை செலுத்துகிறது. அவர்களை நினைவு கூர்ந்து கொண்டாடவும் செய்துள்ளது.
கரோனா காலத்தில் தடுப்பூசிகளை வழங்கி உலக நாடுகளுக்கும் முன்னு தாரணமாக இந்தியா திகழ்ந்துள்ளது. உடல் நலனுக்கு முக்கியமான யோகா கலையை உலக நாடுகளுக்கு இந்தியா வழங்கியுள்ளது.
திருவள்ளுவர் கூறியிருப்பதைப் போல், நாட்டை வழி நடத்தும் நல்ல நிர்வாகத்தை வழங்கி பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார்.
தமிழகம் ஆன்மிக பூமி. இங்கு 4 லட்சம் கோயில்கள் இருக்கின்றன. 415 கோயில்கள் அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதில் தேவையின்றி அரசியல்வாதிகள் தலையிட்டு அந்த கோயில்களின் வரலாற்றை சிதைக்கின்றனர்.
ஆன்மிக பூமியாக இந்தியா திகழ்கிறது. இந்தியனாக, தமிழ னாக இருப்பதில் பெருமை கொள் கிறேன் என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago