திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் நடுத் தெருவைச் சேர்ந்தவர் தங்கதுரை(34). கடந்த மாதம் 7-ம் தேதி வீட்டில் இருந்து சென்றவர், மீண்டும் திரும்பவில்லை. ஒரு வாரம் கழித்து கிருஷ்ணசமுத்திரம் பகுதியில் உள்ள ஒரு வாய்க்காலில் தங்கதுரை உடல் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
தகவலறிந்த திருவெறும்பூர் போலீஸார் தங்கதுரை உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது தங்கதுரையின் செல்போனை கிருஷ்ணசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த அவரது பள்ளிப்பருவ நண்பரான சப்பாணி(35) பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. அவரைப் பிடித்து விசாரித்தபோது, நகைக்கு ஆசைப்பட்டு தங்கதுரையைக் கொலை செய்ததாக சப்பாணி ஒப்புக்கொண்டார்.
இதுபோலவே தன் தந்தை தேக்கன்(75), திருவெறும்பூர் மேலகுமரேசபுரத்தைச் சேர்ந்த கோகிலா(70), பாப்பாக்குறிச்சியைச் சேர்ந்த அற்புதசாமி(70), கீழ குமரேசபுரத்தைச் சேர்ந்த விஜய் விக்டர்(27), கூத்தைப்பாரைச் சேர்ந்த சத்தியநாதன்(45), பெரியசாமி(75), வடகாடு விஸ்வம்பாள் சமுத்திரத்தைச் சேர்ந்த அதிமுக கவுன்சிலர் குமரேசன்(50) ஆகிய 7 பேரையும் கொலை செய்ததாக சப்பாணி வாக்குமூலம் அளித்தார்.
இதையடுத்து, தங்கதுரை கொலை வழக்கில் சப்பாணியை கைது செய்த போலீஸார் கடந்த மாதம் 29-ம் தேதி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். பின்னர், சப்பாணியை நேற்று முன்தினம், 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து, ஏஎஸ்பி கலைச்செல்வன் தலைமையிலான போலீஸார் நேற்றுகாலை கிருஷ்ணசமுத்திரம் கிராமத்துக்கு சப்பாணியை அழைத்துச் சென்றனர். அங்கு ஏற்கெனவே தங்கதுரை உடல் மீட்கப்பட்ட வாய்க்காலுக்கு அருகில், சத்தியநாதனின் உடலைப் புதைத்து வைத்திருப்பதாக சப்பாணி அடையாளம் காட்டி னார். வட்டாட்சியர் ரங்கராஜன் முன்னிலையில் அந்த இடத்தை தோண்டிப் பார்த்தபோது எலும்புகளும், ஆடைகளும் அங்கு இருந்தன.
பின்னர், சப்பாணி கூறிய தகவலின்பேரில், அதே ஊரில் உள்ள செக்குப்பாறை குளக்கரை யில் குமரேசனின் உடல் பாகங்களின் எலும்புகள் கிடைத்தன. மண்டை ஓட்டைக் காணவில்லை. அதுகுறித்து கேட்டபோது, குளத்தின் மற்றொரு பகுதியில் புதைத்து வைத்திருப்பதாக சப்பாணி கூறியதை அடுத்து அங்கு தேடியபோது, மண்டை ஓடு கிடைத்தது.
இதேபோல, கிருஷ்ணசமுத்திரத்தில் உள்ள சந்தனக்கருப்பு கோயில் அருகில் புதைக்கப் பட்டிருந்த விஜய் விக்டரின் உடல் பாகங்களை தோண்டி எடுத்தனர். ஆனால், அவரது 2 கால் களையும் காணவில்லை. அவற்றை கல்லணை பகுதியில் வீசிவிட்டதாக சப்பாணி கூறியுள்ளார். அதன்பின் அதே பகுதியில் உள்ள மாந்தோப்பில் இருந்து சப்பாணியின் தந்தை தேக்கனின் உடலைத் தோண்டி எடுத்தனர். பின்னர் கூத்தைப்பார் செவந்தான்குளம் பகுதியில் கோகிலாவின் உடல் பாகங்களை தோண்டி எடுத்தனர். அவரது தலை மற்றும் 2 கால்களின் எலும்புகள் கிடைக்கவில்லை.
நேற்று ஒரே நாளில் மட்டும் 5 இடங்களில் தோண்டி கைப்பற்றப்பட்ட எலும்புத் துண்டு களை திருச்சி அரசு மருத்துவமனை உடற்கூறு ஆய்வியல் துறை மருத்துவர் சரவணன் தலை மையிலான குழுவினர், அந்தந்த இடத்திலேயே பரிசோதனை செய்தனர். அப்போது டிஎன்ஏ சோதனைக்கு தேவைப்படும் சில பாகங்களை மட்டும் சேகரித்து எடுத்துச் சென்றனர். அற்புதசாமி, பெரியசாமி ஆகியோரின் உடல் பாகங்களை மீட்கும் பணி மீதமுள்ளது.
இதுகுறித்து ஏஎஸ்பி கலைச்செல்வனிடம் கேட்டபோது, “தோண்டி எடுக்கப்பட்ட உடல் பாகங்களில் சில பகுதிகளை மட்டும் சேகரித்து, டிஎன்ஏ சோதனைக்காக மருத்துவர்கள் கொண்டு சென்றுள்ளனர். திங்கள்கிழமையும் இப்பணி தொடரும்” என்றார்.
சைக்கோ அல்ல
இவ்வழக்கை விசாரிக்கும் தனிப்படை போலீஸார் கூறும்போது, “சப்பாணியை சைக்கோ என்று கூறுவது தவறு. அவர் ஒரு ஆதாயக் கொலை காரர். உழைக்க விரும்பாமல், குறுக்கு வழியில் சம்பாதிக்க நினைத்துள்ளார். இதற்காக தன்னிடம் நெருங்கி பழகும் நபர்களிடன் குடும்ப விவரங்களை அறிந்துகொண்டு, அதற்கு தீர்வு ஏற்படுத்த சிறப்பு பூஜைகள் செய்வதாக கூறி யுள்ளார்.
அதை நம்பி வருவோரிடம், கண்களை மூடிக்கொண்டு ஒரு நிமிடம் தரையில் குப்புறப் படுத்து இறைவனை வணங்குமாறு கூறியுள்ளார். அவர்கள் அவ்வாறு செய்யும்போது, பின்னால் இருந்து தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு கொலை செய்துள்ளார். ஒரு சிலரிடம் தனக்கு தங்கப் புதையல் கிடைத்திருப்பதாகவும், அந்த நகைகளை விற்பனை செய்ய உதவ வேண்டும் எனவும் கூறி அழைத்து வந்து மது வாங்கி கொடுத்து கொலை செய்துள்ளார். இக்கொலைகளில் வேறு யாருக்கும் தொடர்பு இல்லை” என்றனர்.
கிருஷ்ணசமுத்திரம், கூத்தைப்பார் கிராம மக்கள் கூறும்போது, “சப்பாணி அனைத்து நாட்களிலும் வெள்ளை வேட்டி சட்டையுடன் பகட்டாக இருப்பார். எங்கள் ஊரைச் சேர்ந்த பலரை அழைத்துச் சென்று மது வாங்கி கொடுத் திருக்கிறார். அதுபோன்று கொடுத்துதான் சிலரை கொன்றிருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இவற்றைப் படித்த பிறகு, ‘நல்லவேளை.. நான் தப்பித்துவிட்டேன்’ என பலர் வெளிப்படையாக பேசுகின்றனர்” என்றனர்.
சாமியார் மீது சந்தேகம்
கொல்லப்பட்ட குமரேசனின் உறவினர் சீதா கூறும்போது, “சப்பாணிக்கும், கோட்டப் பாளையத்தைச் சேர்ந்த சாமியார் செல்லையா வுக்கும் தொடர்பு உள்ளது. அந்த சாமியார் மூலம்தான் குமரேசனுக்கும், சப்பாணிக்கும் பழக்கம் ஏற்பட்டது. எனவே போலீ ஸார் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும்” என்றார்.
கொல்லப்பட்ட குமரேசனின் உறவினர் சீதா கூறும்போது, “சப்பாணிக்கும், கோட்டப் பாளையத்தைச் சேர்ந்த சாமியார் செல்லையா வுக்கும் தொடர்பு உள்ளது. அந்த சாமியார் மூலம்தான் குமரேசனுக்கும், சப்பாணிக்கும் பழக்கம் ஏற்பட்டது. எனவே போலீ ஸார் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும்” என்றார்.
சப்பாணியால் கொலை செய்யப் பட்ட பெரியசாமியின் மகன் சுப்பிர மணியன் கூறும்போது, “2009-ம் ஆண்டு காணாமல் போன என் தந்தை என்றாவது ஒருநாள் திரும்பி வருவார் என எதிர்பார்த்திருந்தோம். ஆனால், அவர் வைத்திருந்த, பணம் மற்றும் நகைக்கு ஆசைப்பட்டு என் தந்தையை சப்பாணி கொலை செய்துள்ளார். சப்பா ணிக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும்” என்றார்.
எங்கு, யாரை, எப்போது?
திருச்சி கூத்தைப்பார் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி(75). கடந்த 2009-ம் ஆண்டு இறுதியில், இவரை கொலை செய்து உடலை குளத்துக்குள் வீசிவிட்டதாக சப்பாணி வாக்கு மூலம் அளித்துள்ளார். இதுதான் இவருக்கு முதல் கொலை எனவும் போலீஸார் தெரிவித்தனர்.
கோகிலாவை கடந்த 2012-ம் ஆண்டு சிவந்தான்குளம் அருகேயும், பாத்திமாபுரத்தைச் சேர்ந்த அற்புதசாமியை(70) கடந்த 28.12.2012 அன்று என்.ஐ.டி. வளாகத்திலும், கீழ குமரேசபுரம் விஜய் விக்டரை(27) கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கிருஷ்ணராயபுரத்தில் உள்ள சந்தனக்கருப்பு கோயில் அருகேயும் கொலை செய்துள்ளார். சப்பாணியின் தந்தை தேக்கன்(75), 3 கிராம் மோதிரத்தை தர மறுத்ததால் 14.11.2015 அன்று அவரை கொன்றுள்ளார். கூத்தைப்பார் கிராமத்தைச் சேர்ந்த சத்தியநாதனை(45), 16.2.2016 அன்றும், விஸ்வம்மாள் சமுத்திரத்தைச் சேர்ந்த அதிமுக பேரூராட்சி கவுன்சிலரான குமரேசனை(50) செக்குப்பாறை குளத்தின் அருகேயும், வேங்கூர் கிராமத்தைச் சேர்ந்த தங்கதுரையை(34) கடந்த 7.9.2016 அன்றும் கொலை செய்துள்ளார்.
ஆதரவற்ற நிலையில் தாய்
சப்பாணியின் தந்தை தேக் கன்(75), தாய் கருப்பாயி(70). சப்பாணியின் சகோதரர் விஜயகாந்த், விபத்து ஒன்றில் இறந்துவிட்டார். அதன் பிறகு, அவரது மனைவி மோகனப்பிரியாவை சப்பாணி திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் சப்பாணியின் செயல்பாடுகள் பிடிக்காததால், மோகனப்பிரியா தலைமறை வாகிவிட்டார். அதன்பின் 2015-ம் ஆண்டு தேக்கனையும் சப்பாணி கொன்றுள்ளார். இந்த சூழலில் தற்போது சப்பாணியும் கைது செய்துவிட்டதால் சாப்பாட்டுக்குக்கூட வழியின்றி கருப்பாயி தனியாக தவித்து வருகிறார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
46 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago