6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின்படி, கால்நடைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டி.எஸ்.ஜவஹர் ஆதி திராவிடர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஒருங்கிணைந்த நவீன வேளாண்மை மற்றும் நீர் நிலைகள் மறு சீரமைப்பு திட்டம் முதன்மைச் செயலாளராக மங்கத் ராம் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளராக மணிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளராகவும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளராகவும் இருந்த கார்த்திக் கால்நடைத்துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறுதொழில் வளர்ச்சிக்கழகத்தின் மேலாண் இயக்குநர் ஆனந்த், ஆதி திராவிடர் நலத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதி திராவிடர் நலத்துறை இயக்குநராக இருந்த மதுமதி சிறுதொழில் வளர்ச்சிக்கழகத்தின் மேலாண் இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்