நீலகிரியில் இன்று மாலைக்குள் சீரான மின் விநியோகம்: அமைச்சர் செந்தில்பாலாஜி

By செய்திப்பிரிவு

சென்னை: "நீலகிரியில் இன்று மாலைக்குள் சீரான மின் விநியோகம் அளிக்கப்படும்" என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, "மழையை எதிர்கொள்ள முதல்வர் வழிகாட்டுதல்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு எந்தவித சிரமமும் இன்றி மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. காவிரி ஆற்றில் வெள்ளம் செல்லும் இடங்களில் சில இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் விநியோம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் மரம் விழுந்த காரணத்தால் 150 மின்மாற்றிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் நீலகிரி மாவட்டத்தில் சீரான மின்சாரம் விநியோகம் செய்யப்படும். சீரான மின்சாரம் விநியோகிக்க 234 தொகுதிகளிலும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 1.11 ஆயிரம் மின் கம்பங்கள் தயார் நிலையில் உள்ளது. 10 ஆயிரம் கி.மீ மின் கம்பிகள் தயார் நிலையில் உள்ளது. கடந்த ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மின்மாற்றிகள் மற்றும் துணை மின் நிலையங்கள் உள்ள இடங்களின் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை முழுவதும் புதைவட கம்பிகள் பதிக்கும் பணி முடிந்ததும் மீதமுள்ள மாவட்டங்கள் விவரங்கள் மற்றும் மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு விரைவில் அறிவிப்பு வெளியாகும். தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைகளில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜர் நிலையங்கள் அமைப்பதற்கு முதற்கட்டமாக 100 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் டெண்டர் கோரப்பட்டு அறிவிப்பு வெளியாகும்.

எந்தவித மக்கள் செல்வாக்கும் இல்லாமல் அரசியலில் தனது இருப்பை காட்டிக்கொள்ள ஊடகத்தை பயன்படுத்தி வரும் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பதிலளிக்க விரும்பவில்லை. ஏற்கெனவே நான் கேட்ட கேள்விக்கு அண்ணாமலை பதில் அளித்த பிறகு நான் பதிலைச் சொல்கிறேன். அமலாக்கத்துறை என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளது என்பதை ஓர் அரசியல் காட்சியை சார்ந்தவர் கூறி மிரட்டும் அள்விற்கு அண்ணாமலை உள்ளார்" என்று அமைச்சர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்