சாவர்க்கரை எதிர்ப்போர் தேச வரலாறு தெரியாதவர்கள் என்று ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி துணைநிலை ஆளு நர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாட்டின் 75-வது சுதந்திர தினவிழாவை சிறப்பாக கொண்டாடு வதற்காக நாளை (ஆக. 6) பிரதமர் தலைமையில் குழு அமைத்து, அதற்கான ஆலோசனைக் கூட்டமும் நடக்கிறது. அதில் நான் பங்கேற்கிறேன். புதுவையிலும் சிறப்பாக நிகழ்வுகளை எடுத்துச் செல்கிறோம். சுதந்திர தினத்தில், அனைத்து தியாகிகளுக்கும் மரியாதை கொடுத்து கொண்டாடு வோம்.
சாவர்க்கர் அந்தமான் சிறையில் 10 ஆண்டுகள் தனிமை சிறையிலிருந்து நாட்டுக்காக போராடியிருக்கிறார். 1906-ம் ஆண்டிலேயே அவர் படிக்கச் சென்றபோதே சுதந்திர கனலை ஏற்றியிருக்கிறார். புதுச்சேரி தியாகப் பெருஞ்சுவற்றில் அவரதுநினைவு பெயர் பலகையை பதித்ததற்கு, சிலர் தேவையில் லாமல் பிரச்சினை செய்து கொண் டுள்ளனர். இதனை அரசியலாக்க வேண்டாம்.
» சாவர்க்கரை எதிர்ப்போர் தேச வரலாறு தெரியாதவர்கள்: ஆளுநர் தமிழிசை கருத்து
» நெல்லை, தென்காசியில் மழை நீடிப்பு: பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரேநாளில் 9 அடி உயர்வு
நாடு முழுவதும் நாம் தியாகிகளை கொண்டாடி வருகிறோம். அந்த தியாகத்தை கொச்சைப்படுத்த வேண்டாம். எதிர்ப்புதெரிவிப்பவர்கள், அந்தமான் தனிமை சிறையில் ஒரு நாள் இருப்பார்களா? அவர் நாட்டுக்காக சிறையில் இருந்தது உண்மை.
அவர் சுதந்திர போராட்ட வீரர் தான். அதனை எதிர்ப்பவர்கள், தேச வரலாறு தெரியாதவர்களாகவே இருப்பார்கள். புதுவை ஆளுநர் மாளிகை நிர்வாகம் வெளிப் படையாகவே செயல்படுகிறது. எந்தக் குற்றச்சாட்டையும் எதிர் கொள்ளும் என்று குறிப்பிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago