சர்வதேச தடகள போட்டியில் 33 பதக்கங்கள் - முதல்வரிடம் காவல்துறையினர் வாழ்த்து பெற்றனர்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் இருந்து பாய்மரப் படகில் ராமேசுவரம் சென்று மீண்டும் சென்னை திரும்பி உலக சாதனை படைத்துள்ள கடலோர பாதுகாப்புக் குழும காவலர்களும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தடகள போட்டியில் 33 பதக்கங்கள் வென்ற காவல்துறையினரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மீனவர்கள் மத்தியில் கடலோர பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தைச் சேர்ந்த 21 காவலர்கள் 3 ஜெ-80 கிளாசிக் பாய்மரப் படகுகளில் ஜூலை 9-ம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு ராமேசுவரம் சென்றனர், அங்கிருந்து 540 கடல் மைல் தூரம் பயணித்து மீண்டும் 17-ம் தேதி பிற்பகல் சென்னை வந்தடைந்தனர். இந்த பாய்மரப் படகுபயணம், இத்துறையில் நிபுணத்துவம் பெற்ற ராயல் மெட்ராஸ் யாச்ட் கிளப்புடன் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தியா மற்றும் சர்வதேச அளவில் தேசிய படகோட்டம் நிகழ்ச்சியை நடத்துவதற்கான அதிகாரம் பெற்ற தேசிய அமைப்பான இந்திய பாய்மரப் படகு சங்கத்தின் அங்கீகாரத்தை இந்த சாகசப் பயணம் பெற்றுள்ளதுடன், உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. இந்த சாதனையை நிகழ்த்திய உலகின் முதல் காவல்படை என்ற பெருமையை தமிழக காவல்துறை பெற்றுள்ளது.

சாதனை பயணம் மேற்கொண்ட கடலோர பாதுகாப்புக் குழும காவலர்கள், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். உலக சாதனை புத்தகத்தால் வழங்கப்பட்ட சான்றிதழை முதல்வரிடம் கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் டிஜிபி சந்தீப் மித்தல் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

விளையாட்டு பதக்கங்கள்

காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான சர்வதேச தடகளப் போட்டிகள், நெதர்லாந்து நாட்டின் ரோட்டர்டெம் நகரில் ஜூலை 22 முதல் 31 வரை நடத்தப்பட்டன. இதில், தமிழக காவல்துறை சார்பில் எ.மயில்வாகனன் தலைமையில் 13 பேர் பங்கேற்றனர். இவர்கள் பல்வேறு போட்டிகளில் 16 தங்கம், 14 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் என மொத்தம் 33 பதக்கங்களை வென்றனர். இந்த பதக்கங்களை வென்ற 13 பேரும் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, உள்துறை செயலர் க.பணீந்திர ரெட்டி, டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், ஊழல் தடுப்பு இயக்குநர் ப.கந்தசாமி, ஆயுதப்படை கூடுதல் டிஜிபி அபய்குமார் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

41 mins ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்