அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிமாற்ற விசாரணையை தொடரலாம்: தடையை நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிமாற்ற விசாரணையை தொடரலாம் என இடைக்காலத் தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2002-06 காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில் வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்தவர் அனிதா ராதாகிருஷ்ணன். இவர்தற்போது மீன்வளத் துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

இவர் வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக 2006-ல்லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இவர் சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் அமலாக்கத் துறையினர் தனியாக வழக்கு பதிவு செய்தனர். மேலும், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான ரூ.6.50 கோடி சொத்துகளைகடந்த பிப்ரவரியில் முடக்கினர்.

தனக்கு எதிராக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரியும், சொத்துகளை முடக்கியதை எதிர்த்தும் அனிதாராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை நீதிபதிகள் எஸ்.வைத்யநாதன், சி.வி.கார்த்திகேயன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போதுஅமலாக்கத் துறையின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள் இதுதொடர்பாக பதில் அளிக்க உத்தரவிட்டனர்.

அதன்படி, அமலாக்கத் துறைசார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இடைக்காலத் தடையை நீக்கி வழக்கு விசாரணையை தொடரவும் அனுமதி கோரப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.வைத்யநாதன், ஏ.டி.ஜெகதீஷ் சந்திராஅமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில், ‘‘இதே புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையில் இருப்பதால், இந்த வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்’’ என கோரப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்குவிசாரணையை வரும் செப்.9-ம்தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அமலாக்கத் துறையின்விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவிட்டனர்.

மேலும் அமலாக்கத் துறையினர் விசாரணைக்கு அழைத்தால் நேரில் ஆஜராகி முழுஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

10 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்