திருப்பூர்: திருப்பூர் அருகே கார், தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
திருப்பூரில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் பழநி நோக்கி நேற்று மாலை தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. இதே சமயத்தில், கொடுவாய் பகுதியை அடுத்த காக்காபள்ளம் அருகே, தாராபுரத்தில் இருந்து திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் மையத் தடுப்பை கடந்து எதிரே வந்த தனியார் பேருந்து மீது மோதியது. இதில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் இறங்கியது.
இந்த விபத்தில் காரில் பயணித்த 6 பேர் தூக்கி வீசப்பட்டனர். இவர்களில் கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்த வீரக்குமார் (30), சஜித் (36), முருகேசன் (35) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மற்ற 3 பேர் ஆபத்தான நிலையில் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதில் வெற்றிச்செல்வம் (35) என்பவர் உயிரிழந்தார்.
எஞ்சிய 2 பேர் மற்றும் பேருந்தில் பயணித்த 2 பேர் என 4 பேர் ஆபத்தான நிலையில் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், பேருந்தில் பயணித்த 10 பேர் சிறு காயங்களுடன் திருப்பூர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காரின் சக்கரங்கள் கழன்று பல அடி தூரம் சென்ற நிலையில், முன்பகுதி முழுவதும் சேதமடைந்தது. போலீஸார் சென்று சேதமடைந்த கார் மற்றும் பேருந்தை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர் செய்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago