தேமுதிக தலைவர் விஜயகாந்த் செவ்வாய்க்கிழமை காலை 11.45 மணிக்கு மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் மலேசியா புறப்பட்டு சென்றார். அவருடன் மனைவி பிரேமலதாவும் சென்றுள்ளார்.
இவர்கள் இருவரையும் இளைஞர் அணி மாநில தலைவர் எல்.கே.சுதீஷ், எம்.எல்.ஏ.க்கள் சந்திரகுமார், பார்த்தசாரதி, அனகை முருகேசன், இளங்கோவன் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முகபாண்டியன் ‘‘சகாப்தம்’’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். மகனின் ஷூட்டிங் பணிகளை கவனிப்பதற்காக அவர் மலேசியா சென்றதாக கூறப்படுகிறது.
மலேசியா மற்றும் சிங்கப்பூரில் 10 நாட்கள் தங்கியிருந்து படப்பிடிப்புகளை முடித்து விட்டு, விஜயகாந்த் சென்னை திரும்புவார் என தேமுதிகவினர் தெரிவித்தனர். நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு, முதல் முறையாக விஜயகாந்த் வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago