நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பெண் வட்டாட்சியர் குற்றவாளி: தண்டனையை அறிய நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: ஆக்கிரமிப்பை அகற்றவில்லை எனக்கூறி தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பெண் வட்டாட்சியரை குற்றவாளி என தீர்ப்பளித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக அவர் நாளை (ஆக.5) நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தாலுகாவில் உள்ள கடலாடி கிராமத்தில் பொதுப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி முருகன் என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், “12 வாரங்களில் மனுதாரரின் கோரிக்கை குறித்து பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்” என கடந்த 2017 டிசம்பரில் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை அதிகாரிகள் முறையாக அமல்படுத்தவில்லை எனக்கூறி முருகன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு கடந்த ஜூன் மாதம் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, 4 வாரங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக தமிழக அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் தலைமை நீதிபதி முனீ்ஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போதுநீதிபதிகள், “ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் அதை அகற்றாததுநீதிமன்றத்தை வேண்டுமென்றே அவமதிக்கும் செயல். எனவேசம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கு சிறை தண்டனை விதிக்கப்போகிறோம்” என அறிவித்தனர்.

அப்போது, 2 நாட்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என அரசுதரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையேற்க மறுத்த நீதிபதிகள், கலசப்பாக்கம் தாலுகாவில் அப்போது பணிபுரிந்த பெண் வட்டாட்சியரை இந்த வழக்கில் குற்றவாளி என அறிவித்து, தண்டனை விவரங்கள் நாளை (ஆக.5) அறிவிக்கப்படும் என்றும், அதற்காக அவர் நாளை நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

மேலும் உயர் நீதிமன்றத்தில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஏராளமான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் குவிந்து கிடப்பதாகவும், எத்தனைமுறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தாலும் அவர்கள் அதைமதித்து நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் சுட்டிக் காட்டியதலைமை நீதிபதி, இது ஆரம்பம்தான் எனவும் எச்சரித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்