இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்கள், தேசப் பாதுகாப்பு கருதி தொடர்ந்து கைது செய்யப்படுவார்கள் என்று அந்நாட்டு ராணுவ செய்தித் தொடர்பாளர் ருவன் வணிகசூரிய எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று கொழும்புவில் செய்தியாளர்களிடம் கூறும்போது, "இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனர்வகள், இலங்கையின் பாதுகாப்பு கருதி தொடர்ந்தும் கைது செய்யப்படுவார்கள்.
இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுகின்றனர் என அடிக்கடி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இது உண்மைக்குப் புறம்பானது.
சர்வதேச கடல் எல்லையை மீறி இலங்கை கடற்பரப்புக்குள் நுழையும் மீனவர்கள், தேசிய பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் இலங்கை நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.
இலங்கை கடற்படையினர் மனிதாபிமானமற்ற விதத்தில் நடந்துகொள்வதாக சில ஊடகங்கள், இணையதளங்கள் தவறான செய்திகளை முன்னெடுத்துச் செல்கின்றன. அவற்றில் எந்தவித உண்மையும் கிடையாது. இதனை நான் முற்றிலுமாக மறுக்கின்றேன்.
சர்வதேச சட்டத்தை மீறும் இந்திய மீனவர்கள் இவ்வாறு கைது செய்யப்படுவதை மனிதாபிமானமற்ற செயல் என்று எவரும் கூற முடியாது" என்றார் அவர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago