வைகை ஆற்றில் 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்ததையடுத்து 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக வருசநாடு, வெள்ளிமலை, அரசரடி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் மூலவைகையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் முல்லைப் பெரியாறு அணையில் இருந்தும் நீர் திறக்கப்பட்டுள்ளதால் வைகை அணையின் நீர்மட்டம் நேற்று 69 அடியை எட்டியது.

இதனைத் தொடர்ந்து மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 5 மாவட்ட கரையோர மக்கள் ஆற்றில் இறங்கவோ, கடந்து செல்லவோ கூடாது என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக 69 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்ததும் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீரை அப்படியே வெளியேற்றுவது வழக்கம். தற்போது 5 மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளதால் நீரின் தேவை குறைந்துள்ளது. ஆகவே, இம்முறை 70 அடி வரை நீர்மட்டத்தை உயர்த்த பொதுப்பணித்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்