எச்.ஐ.வி. பாதித்த சிறுமியை துரத்திய தனியார் பள்ளி: கல்வியாளர்களின் போராட்டத்துக்கு பிறகு அனுமதி அளித்த பள்ளி நிர்வாகம்

By செய்திப்பிரிவு

பள்ளியில் சேர்க்கப்பட்ட சிறுமியை எச்.ஐ.வி. பாதிப்பு என தெரிந்த பின்னர் வெளியேற்றிய தனியார் பள்ளியின் நடவடிக்கையைக் கண் டித்து பாதுகாவலர்கள் மற்றும் கல்வியாளர்கள் செவ்வாய்க் கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை புலியகுளம் பகுதியில், எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட ஆதரவற்றோருக்கான மெர்ஸி இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு எச்.ஐ.வி-யால் பாதிக்கப் பட்ட 17 குழந்தைகள், 8 பெரியவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இதிலுள்ள குழந்தை கள் அரசு, தனியார் பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் இந்த மையத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட 15 வயது சிறுமியை கோவை அவிநாசி சாலை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பில் செவ்வாய்க்கிழமை சேர்த்தனர்.

பள்ளியில் சேர்க்கப்பட்டு வகுப் புக்கு அனுப்பப்பட்ட சிறுமி சிறிது நேரத்தில் பள்ளி நிர்வாகத்தால் வெளியே அனுப்பப்பட்டார்.

நோய் பாதிப்பு இருப்பது தங்களுக்கு முன்கூட்டியே தெரி யாது, தற்போதுதான் தெரிய வந்துள்ளது. எனவே, பள்ளியை விட்டுச் சென்றுவிடுமாறு தெரி வித்ததாகக் கூறப்படுகிறது.

பள்ளி நிர்வாகத்தின் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த மெர்ஸி இல்ல நிர் வாகிகள் மற்றும் கல்வியாளர்கள் பள்ளி நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

ஆனால், பள்ளி நிர்வாகம் சிறுமியை உள்ளே அனுமதிக்க மறுத்ததைத் தொடர்ந்து பள்ளி வளாகத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பள்ளித் தாளாளர் ஜோய் எலிசபெத் செய்தியா ளர்களிடம் கூறும்போது, பள்ளியில் சேர்க்கும்போது அச்சிறுமி எச்.ஐ.வி. பாதித்தவர் என்பதை அவர்கள் சொல்லவில்லை. அரசு உதவி பெறும் பள்ளியாக இருந்தாலும் எச்.ஐ.வி. பாதிக் கப்பட்ட குழந்தையை சேர்க்க வேண்டுமானால் எங்களது பள்ளி நிர்வாகிகள் குழுவிடம் கலந்து பேசித்தான் முடிவெடுக்க முடியும் என்றார்.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகெளரியிடம் செய்தி யாளர்கள் கேட்டபோது, அரசு உதவி பெறும் சிறுபான்மைப் பள்ளி என்பதால் எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட சிறுமியைப் பள்ளியில் சேர்ப்பதா, வேண்டாமா என்பதை முடி வெடுக்க அவர்களுக்கு அதி காரம் உள்ளது எனத் தெரிவித்தார்.

யாருக்கும் வரக்கூடாது

பாதிக்கப்பட்ட சிறுமி கூறும் போது, ‘‘பள்ளியில் சேர்த்த பின்னர் வகுப்பறையில் அமர்ந்திருந்த என்னை அழைத்து, பள்ளியை விட்டுச் சென்றுவிடுமாறு தெரிவித் தனர்.

எனக்கு ஏற்பட்ட இந்நிலை யாருக்குமே ஏற்படக் கூடாது’’ எனக் கண் கலங்கியபடியே தெரிவித்தார்.

முதல்வர் ஜெயலலிதாவின் படத்துடன் கூடிய புத்தகப் பையையும், அரசு வழங்கிய இலவச சீருடையையும் அணிந்து கொண்டு பள்ளியில் அனுமதிப்பார்களா… மாட்டார்களா… என பள்ளியின் வாசலில் நின்று நடப்பதைக் கண்ணீருடன் அச்சிறுமி நின்று கொண்டிருந்த காட்சி அங்கிருந்த அனைவரின் மனதையும் கலங்க வைத்தது.

மிகுந்த போராட்டத்துக்கு பிறகு செவ்வாய்கிழமை மாலை பள்ளி நிர்வாகம் அச்சிறுமியை பள்ளிக்கு தொடர்ந்து வரலாம் என்று அனுமதி அளித்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

59 mins ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்