பாதியில் கலைந்த ஐஏஎஸ் கனவு: கோவை தீ விபத்தில் இறந்த இளைஞரின் தந்தை சோகம்

By ஆர்.கிருஷ்ணகுமார்

“ஐஏஎஸ் படித்து கலெக்டராகி சொந்த ஊருக்கு நன்மை செய் வேன் என்று கூறிக்கொண்டிருந்த எனது மகன் தீ விபத்தில் இறந்து விட்டான். அவனது கனவும் பாதி யில் கலைந்துவிட்டது” என்று வேதனையுடன் கூறினார் கோவை தீ விபத்தில் இறந்த இளைஞரின் தந்தை.

விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் கோட்டக்குப்பம் அருகே உள்ள பெரியமுதலியார் சாவடி திவான்கந்தப்பா நகரைச் சேர்ந்த வர் தர்மன். இவரது மனைவி பச்சியம்மாள். இருவரும் கூலித் தொழிலாளர்கள். இவர்களது மகன் சக்திவேல்(23), விழுப்புரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல் லூரியில் பிஇ சிவில் இன்ஜினீ யரிங் படித்துவிட்டு, கோவை காந்தி பார்க் தடாகம் சாலை பகுதி யில் உள்ள தனியார் ஐஏஎஸ் அகாடமியில் சேர்ந்து, பயிற்சி பெற்றார். இந்நிலையில், அங்கு நேற்று முன்தினம் நேரிட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

அவரது சடலம் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் நேற்று பிரதேப் பரி சோதனை செய்யப்பட்டது. அங்கு வந்திருந்த அவரது தந்தை தர்மன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

எனக்கு 2 மகன்கள். மூத்தவன் சக்திவேல், இளையவன் தமிழ் வேள். மகளுக்கு திருமணம் ஆகி விட்டது. சக்திவேல் கலெக்டராக ஆசைப்பட்டான். எனது இளைய மகன் தமிழ்வேள், பிளஸ் 2 படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, ஏசி மெக்கானிக்காக பணியாற்று கிறான். நான், மனைவி, இளைய மகன் மூவருமே வேலைக்குச் சென்று, சக்திவேலை படிக்க வைத்தோம். அவனும் மிக நன்றாகப் படித்தான். பிஇ முடித்த பிறகு வேலைக்குச் செல்லாமல், கோவையில் உள்ள தனியார் ஐஏஎஸ் அகாடமியில் சேர்ந்து, தேர்வுக்குத் தயாராகினான்.

அவன் நிச்சயம் ஐஏஎஸ் தேர்ச்சி பெற்று, கலெக்டராகிவிடுவான். எங்கள் குடும்ப கஷ்டம் தீர்ந்து விடும் என்று நம்பிக்கொண்டு இருந்தோம். அவனது ஐஏஎஸ் கனவு பாதியில் கலைந்துவிட்டது என்றார்.

உயிர் தப்பிய 150 பேர்

தனியார் ஐஏஎஸ் அகாடமி செயல்பட்டு வரும் கட்டிடத்தின் ஓர் அறையில், தனியார் தொழிற் சாலை ஊழியர்களுக்கு வழங்கு வதற்காக பட்டாசுகளை வைத்திருந் தனர். அவற்றில் பற்றிய தீ, வேகமாக பரவியது. அந்த கட்டிடத்தின் மேல் தளத்தில், ஐஏஎஸ் தேர்வுக்காக தயாராகிக்கொண்டு இருந்த சுமார் 150 பேர், மாதிரித் தேர்வு எழுதிக்கொண்டு இருந்தனர். தீ பரவிய உடனேயே அவர்கள், அங்கிருந்து வெளியேறத் தொடங்கினர். சக்திவேல் உள்ளிட்ட சிலர் உள்ளே சிக்கிக்கொண்டனர். மயங்கி விழுந்த சக்திவேல், அதிக புகைமூட்டம் காரண மாக, மூச்சுத் திணறி இறந்துள் ளார். பாதிக்கப்பட்ட 2 பெண் கள் உள்ளிட்ட 5 பேர், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் நேற்று அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விசாரணை அவசியம்

அரசு மருத்துவமனையில் நேற்று திரண்ட நாம் தமிழர் கட்சியினர், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என கூறினர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, “தீ விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம். விசாரணை முடிவுக்குப் பின்னரே, மேல் நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்