மதுரை: தேர்வு முறையை மாற்றாமல் பழைய நடைமுறைப்படியே தட்டச்சு தேர்வுகளை நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு தட்டெழுத்து, சுருக்கெழுத்து, கம்யூட்டர் பயிற்சி பள்ளிகள் சங்கத் தலைவர் சோமசங்கர், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் தொழில் நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் ஆண்டுதோறும் இளநிலை தட்டச்சு, முதுநிலை தட்டச்சு தேர்வு என 2 நிலைகளில் தட்டச்சு தேர்வுகள் நடைபெறும். இரு தேர்வுகளும் தாள்-1, தாள்-2 என இரண்டு நிலைகளில் நடைபெறும்.
இளநிலை தட்டச்சு தேர்வில் தாள்-1 ஸ்பீடு, தாள் - 2 ஸ்டேட்மென்ட், லெட்டர் டைப்பிங் ஆக இருக்கும். அவற்றை குறிப்பிட்ட நேரத்தில் தட்டச்சு செய்து கொடுக்க வேண்டும். கடந்த 75 ஆண்டுகளாக இந்த முறையில்தான் தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தற்போதைய தேர்வு அறிவிப்பில் இளநிலை மற்றும் முதுநிலை தேர்வில் தாள்-1 லெட்டர், ஸ்டெட்மெண்ட் என்றும், தாள்-2 ஸ்பீடு என கூறப்பட்டுள்ளது. இந்த முறையை ரத்து செய்து 75 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் முறைப்படியே இளநிலை, முதுநிலை தட்டச்சு தேர்வு நடைபெற உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
» கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா கோலாகலம்: சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த மலர் கண்காட்சி
» நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சென்னை மாநகராட்சி ஆணையர்கள் நேரில் ஆஜர்
இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரித்து, ஏற்கெனவே நடைமுறையில் இருந்து முறைப்படியே தட்டச்சு தேர்வுகள் நடைபெற வேண்டும் என்று உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
54 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago