நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சென்னை மாநகராட்சி ஆணையர்கள் நேரில் ஆஜர்

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: சாலை ஆக்கிரமிப்பு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை மாநகராட்சி முன்னாள் மற்றும் தற்போதைய ஆணையர்கள் செவ்வாய்க்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

சென்னை பெரம்பூரில் உள்ள ஜமாலியா பகுதியில் ஹைதர் மெயின் தெரு மற்றும் சந்திரயோகி சமாதி தெரு ஆகிய பகுதிகளில் உள்ள 40 அடி சாலை ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாக 2007-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில், ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டும், அதை அமல்படுத்தவில்லை எனக் கூறி, 2015-ம் ஆண்டு, சென்னை மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் மற்றும் மண்டல அதிகாரி மோகனகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படும் கட்டடம் தனியாருக்கு சொந்தமானது. எனவே அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதா? என கேள்வி எழவில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், 40 அடி சாலை 20 அடி சாலையாக மாறும் அளவிற்கு எழுப்பப்பட்டுள்ள கட்டடத்திற்கான திட்ட அனுமதி குறித்து மாநகராட்சியின் அப்போதைய ஆணையரும், மண்டல அதிகாரியும் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மண்டல அதிகாரி மட்டும் ஆஜராகி இருப்பதாகவும், தவிர்க்க இயலாத காரணங்களால் அப்போதைய ஆணையர் விக்ரம் கபூர் ஆஜராக இயலவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த விளக்கத்தால் அதிருப்தியடைந்த நீதிபதிகள், அதிகாரிகள் தங்களை நீதிமன்றத்திற்கு மேலானவர்களாகவும், தங்களுக்கு மேல் யாரும் இல்லை என்றும் நினைத்து கொண்டு இருப்பதாக தெரிவித்தனர்.

அப்போது அரசு தரப்பில் இந்த வழக்கில், தங்கள் தரப்பில் தவறுகள் உள்ளது. இதற்காக அபராதம் விதித்தாலும் ஏற்றுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் நீதிபதிகள், மாநகராட்சியின் அப்போதைய ஆணையர் விக்ரம் கபூர் மற்றும் தற்போதைய ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்காவிட்டால், வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்து விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைத்திருந்தனர்.

பிற்பகல் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது முன்னாள் ஆணையர் விக்ரம் கபூர் மற்றும் தற்போதைய ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் நேரில் ஆஜராகியிருந்தனர். இதையடுத்து இந்த சாலை தொடர்பான உரிமையியல் வழக்கு தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய மாநகராட்சி தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.

மேலும், எதிர்காலத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டால், கட்டாயம் ஆஜராக வேண்டுமென அறிவுறுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்