விழுப்புரம்: விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் உள்ள ஸ்ரீ தருமராஜா திரௌபதியம்மன் கோயிலில் 60 ஆண்டுகளுக்கு பிறகு தர்மர் பட்டாபிஷேக திருவீதி உலா இன்று நடைபெற்றது.
மேல்பாதி கிராமத்தில் உள்ள ஸ்ரீ தருமராஜா திரௌபதியம்மன் கோயிலில் 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் முக்கிய திருவிழாவான தருமர் பட்டாபிஷேக திருவீதி உலாவையொட்டி ஒரு மாதம் முன்பே கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ 5 ஆயிரம் பிரிவு தொகை வழங்க வேண்டும் என கிராம மக்கள் முடிவெடுத்தனர். அதன்படி குறைந்தபட்ச தொகை ரூ 5 ஆயிரம் முதல் லட்சக்கணக்கான ரூபாயை இத்திருவிழாவிற்காக கிராமமக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமமக்களும் நன்கொடை அளித்துள்ளனர்.
இத்தொகையைக் கொண்டு கிராமத்தில் உள்ள பிரதான சாலை, திரௌபதி அம்மன் கோயில் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, ரைஸ்மில் தெரு என 6 தெரு முழுவதும் சுமார் 20 அடி உயரத்திற்கு தென்னங்கீற்று பந்தல் போடப்பட்டது. இன்று காலை 6.50க்குள் தருமருக்கு பட்டாபிஷேகம் நடத்தப்பட்டது.
» “ரெட் அலர்ட் விடுத்தும் மீனவர்களை மீட்பதில் திமுக அரசு மெத்தனம்” - இபிஎஸ் சாடல்
» ‘தமிழகம், புதுச்சேரியில் இயல்பை விட 94% அதிகமாக தென்மேற்கு பருவ மழை பதிவு’
இதனைத் தொடர்ந்து தருமர், கிருஷ்ணர், திரௌபதி, பஞ்ச பாண்டவர்கள், காத்தவராயன் ஆகியோர் யானைப்படை, குதிரைப்படை அணிவகுக்க, கரகாட்டம், மயிலாட்டம், புலி ஆட்டம், பொய்க்கால்குதிரை, செண்டிமேளம், உருமிமேளம் முழங்க கிராமமக்கள் பின் தொடர வீட்டுக்கு வீடு கற்பூர ஆராதனை காட்டபட்டு, வீதி உலா நடைபெற்றது.
இன்று இரவு இன்னிசைக் கச்சேரி நடைபெற உள்ளது. இன்று காலை தொடங்கி, மாலைவரை கோயிலுக்கு வந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதையொட்டி அக்கிராம மக்கள் மட்டுமின்றி, சுற்றுவட்டார கிராமமக்கள் என ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். வளவனூர் போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
முன்னதாக கடந்த 23ம் தேதி முதல் இன்று வரை மகாபாரத சொற்பொழிவு நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர். ''ஆண்டுதோறும் பங்குனி மாதம் இக்கிராமத்தில் 33 அடி உயரமுள்ள தேரை இக்கிராம மக்கள் தோளில் தூக்கி வைத்தபடி வீதி உலா வருவார்கள். இதனைத் தொடர்ந்து தீ மிதி நடைபெற்று வருகிறது என்பதும், அடுத்த தருமர் பட்டாபிஷேக விழா 60 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும்'' என்று இக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago